பிரையார்டைட்டு
பிரையார்டைட்டு Briartite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Cu2(Fe,Zn)GeS4 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
இரட்டைப் படிகமுறல் | இணை மேற்பரப்பு |
மோவின் அளவுகோல் வலிமை | 3½ - 4½ |
மிளிர்வு | உலோகம்; மெருகூட்டப்படாதது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.337 (Calculated) |
அடர்த்தி | 4.337 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது) |
பொதுவான மாசுகள் | Ga, Sn |
பிரையார்டைட்டு (Briartite) என்பது ஓர் ஒளிபுகாத அடர்-சாம்பல் நிற உலோக சல்பைடு கனிமமாகும், Cu2(Zn,Fe)GeS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. மற்ற செருமேனியம்-காலியம்-சல்பைடுகள் போல இக்கனிமத்தில் காலியம் மற்றும் வெள்ளீயத்தின் சுவடுகள் காணப்படுகின்றன.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிரையார்டைட்டு கனிமத்தை Btt[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
1965 ஆம் ஆண்டு காங்கோ நாட்டின் பிரின்சு இலியோபோல்டு சுரங்கத்தில் பிரையார்டைட்டு கண்டறியப்பட்டது. தற்போது இச்சுரங்கம் கிப்புசி சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிராங்கோட்டு மற்றும் பலர் சேர்ந்து இதை கண்டறிந்தனர். கிப்புசி சுரங்கத்தை ஆய்வு செய்த காசுடன் பிரையார்டின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.[3]
நமீபியா, கிரீசு மற்றும் எசுப்பானியா நாடுகளிலும் பிரையார்டைட்டு கனிமம் காணப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Briartite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "New Mineral Names" (PDF). Mineral Society of America. Archived (PDF) from the original on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
- ↑ "Briartite" (PDF). Handbook of Mineralogy. Archived (PDF) from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.