பிரெட் இலாரன்சு விப்பிள்
பிரெட் இலாரன்சு விப்பிள் | |
---|---|
பிறப்பு | 1906|11|5 இரெட் ஓக், அயோவா |
இறப்பு | 2004|8|30|1906|11|5 கேம்பிரிட்ஜ், மசாசூசட் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஆர்வார்டு கல்லூரி வான்காணகம் |
அறியப்படுவது | வால்வெள்ளிகளின் உட்கூறுகள்]] |
பிரெட் இலாரன்சு விப்பிள் (Fred Lawrence Whipple) (நவம்பர் 5, 1906 – ஆகத்து 30, 2004) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு வான்காணகத்தில் 70 ஆண்டுகல் பணிபுரிந்தார்.இவர் சில குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். வால்வெள்ளிக்கான தூசுப்பந்து கருதுகோளை உருவாக்கினார். இவர் விப்பிள் கவசத்தை வடிவமைத்தார்.
வாழ்க்கை
[தொகு]விப்பிள் 1006 நவம்பர் 5 இல் அயோவாவில் உள்ள இரெட் ஓக்கில் ஓர் உழவரின் மகனாகப் பிறந்தார். இளம்பருவத்தின் தொடக்கத்திலேயே இளம்பிள்ளை முடக்குவாதம் தாக்கியதால், தன் வளைதடிப்பந்து வீரராகும் வாழ்க்கையைத் துறக்க நேர்ந்துவிட்டது. இவர் தென்கலிபோர்னியாவில் உள்ல ஆச்சிடெண்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். பின் இலாசு ஏஞ்சலீசுவில் உள்லகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கனிதவியலில் 1927 இல்முதன்மைப் பட்டம் பெற்றார். இவர் 1978 இல் கணிதத்தில் இருந்து வானியலுக்கு மாறிய தன் வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு நினைவுகூர்கிறார் "கணிதம் இயற்பியல், ஊடாக என்னைக் கவர்ந்திழுத்து இறுதியாக வானியலில் குவியவைத்த்து. இங்கே தான் காலமும் வெளியும் கணிதமும் இயற்பியலும் பொதுச் சந்திப்பில் என்னை மயக்கின."[1]
வானியலில் வகுப்பெடுத்தபடி, இவர் பெர்க்கேலி கலிபோர்னியா பல்களைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தை 1931 இல் பெற்றார். பட்டம் படிக்கும் போதே இவர் புதிதாக்க் கண்டுபிடிக்கப்பட்ட குட்டைக்கோளான புலூட்டோவின் வட்டணையின் வடிவத்தைப் படமாக வரைய உதவியுள்ளார். இவர் 1931 இல் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் சேர்ந்தார். வால்வெள்ளிகளின் இயக்கத்தடங்களைப் பற்றி ஆய்வு செய்தார். அவை, உடுக்கணவெளியில் அல்லாமல், சூரியக் குடும்பத்துக்கு உள்ளேயே தோன்றுவதை உறுதிப்படுத்தினார். 1933 இல், he discovered the periodic comet 36P/விப்பிள் எனும் குறிப்பிட்ட அலைவுநேரம் உள்ள வால்வெள்ளியையும் குறுங்கோள் 1252 செலெழ்சியாவையும் கண்டுபிடித்தார். மற்ற ஐவரோடு இணைந்து இவர் ஐந்து அலைவில்லா வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்தார். இவற்றில் முதலாவது C/1932 P1 பெல்டியர்-விப்பிள் ஆகும். இதை தனியாக இலெசுலி பெல்டியர்எனும் பயில்நிலை வானியலாளரும் கண்டுபிடித்தார்.
Target...Earth? எனும் அறிவியல் ஆவணப்படத்தில் விப்பிள் ஒருமுறை தோன்றுகிறார் (1980).
விப்பிள் 2004 இல் தன் 97 ஆம் அகவையில் இறந்தார்.
தகைமைகள்
[தொகு]விருதுகள்
- President's Award for Distinguished Federal Civilian Service, by US President John F. Kennedy (1963)
- வானிலையியல் கழகத்தின் இலியோனார்டு பதக்கம் (1970)
- அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1983)
- பசிபிக் வானியல் கழகத்தின் புரூசு பதக்கம் (1986)
- அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரைத்தகைமை (1987)
- அமெரிக்கப் புவீஇயற்பியல் ஒன்றியத்தின் விப்பிள் விருது (1990)
இவரது பெயர் இடப்பட்டவை
- குறுங்கோள் 1940 விப்பிள்
- அரிசோனாவில் உள்ள ஆப்கின்சு மலையில் அமைந்த விப்பிள் வான்காணகம்
- விப்பிள் கவசம்
- பிரித்தானிய வர்ஜின் தீவுகளில் உள்ள கிரேட் கோமனோ நகரின் விப்பிள் வீடு (இதை மசாசூசட் இலிப்சுவிச்சில் உள்ள ஜான் விப்பிள் வீட்டுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Whipple, Fred L. (1978). "The Earth as part of the Universe". Annual Review of Earth and Planetary Sciences 6 (1): 1–9. doi:10.1146/annurev.ea.06.050178.000245. Bibcode: 1978AREPS...6....1W.
மேலும் படிக்க
[தொகு]- Donald E. Brownlee; Paul W. Hodge (2005). "Fred Lawrence Whipple". Physics Today 58 (3): 86–87. doi:10.1063/1.1897572. Bibcode: 2005PhT....58c..86B.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bruce Medal entry with picture பரணிடப்பட்டது 2016-10-12 at the வந்தவழி இயந்திரம்
- "Dr. Comet", 2002 CNN article பரணிடப்பட்டது 2008-05-07 at the வந்தவழி இயந்திரம்
- Report of his death (BBC)
- Astronomy.com obituary
- Harvard-Smithsonian Center for Astrophysics press release
- Londoner's WWII diary, 6 Feb 1943, observing Whipple's comet பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்