பிரெட்ரிக் புரோபல்
பிரெடெரிக் பிரோபெல் (Frederick Froebel 1782-1852)
"குழந்தைப் பூங்கா முறையின் தந்தை எனப் போற்றப்படும்,பிரோபெல் ஜெர்மன் நாட்டுக் காட்டுப் பகுதியின் ஒரு சிற்றூரில் 1782ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை கிறித்தவத் திருச்சபையில் குருவாகப்பணியாற்றியவர். இவர் தம் குழந்தைப் பருவத்திலேயே தம் தாயாரை இழந்து, மாற்றந் தாயால் வளர்க்கப்பட்டார். இதனால் அதிகமான அதிர்ச்சியுற்ற இவர் நன்னடத்தையைத் தம் தகப்பனாரிட விருந்தோ, தாயாரிடமிருந்தோ பெற இயலவில்லை. இதனால் இவர் வீட்டில் அதிக நேரத்தைச் செலவிடாமல் இயற்கைச் சூழ் நிலையிலேயே அதிக நேரத்தைக் கழித்தார். இதன் விளைவாக இயற்கையினால் ஒரு புது வாழ்க்கையையும் அதன் அடிப்படையில் புதிய கருத்துகளையும் பெற்றார்.
இவரைத் தத்து எடுத்துக்தொண்ட சிற்றப்பா இவரைக் கிராமப் பள்ளிக்கு அனுப்பினார். இவர் பள்ளியில் உதவாக்கரை என்ற பெயரினைப் பெற்றார். இதனால் பதினைந்தாம் வயதில் இவர் பள்ளியை விட்டு நீங்க நேர்ந்தது. இரண்டாண்டுகள் ஒரு காட்டில், காட்டிலாகாத் தலைவரிடத்தில் வேலை செய்த பின்னர், பல்கலைக் கழகப் படிப்பில் ஈடுபட்டு, இரண்டாண்டுகள் கல்வி பயின்றார். அதன் பின்னர், பல தொழில்களை மேற்கொண்டு தோல்வியுற்றார். கடைசியாக, ஆசிரியர் பணியை மேற்கொண்டு, அதில் வெற்றியுடன் திகழ்ந்தார்; பெஸ்டலாசியின் பள்ளியில் பணியாற்றிக் கல்வி முறைகளையும் கற்றார். பிறகு பெர்லின் நகரில் மேற்படிப்பை மேற்கொண்ட பின், இராணுவத்தில் சேர்ந்து, சில ஆண்டுகள் இராணுவ வீரராகத் தொண்டு புரிந்தார். அதன் பின்னர் மறுபடியும் ஆசிரியராகப் பணியேற்றார்.
பிரோபெல் 1826ஆம் ஆண்டு தம் உலகப் புகழ் பெற்ற நூலாகிய (The Education of Man) என்ற நூலை எழுதினார்.
1837ஆம் ஆண்டு குழந்தைப் பூங்காப் பள்ளியை அமைத்து, உளவியல் அடிப்படையில் கற்பித்தார். இவர் இதில் எதிர் பாராத வெற்றியை அடைந்தபொழுதிலும், அரசாங்கம் இப்பள்ளியை மூட ஆணையிட்ட தினால் பேரதிர்ச்சியுற்றார். இவ்வதிர்ச்சிருகுள்ளான இவர் 1852ஆம் ஆண்டு காலமானர்.
பிரோபெல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மிக்க புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார். குழவிப் பருவத்திலும், பிள்ளைப் பருவத் திலும் சுவனிப்பாரின் றியே அவர் வளர்ந்தார். அவர் ஊர் ஊராக அலைந்து திரிந்து, பல தொழில்களை ஏற்றுச் செய்ய முயன்றர். அவர் சுவிட்ஸர்லாந்திலும் ஜெர்மனியிலும் தாமே சொந்தமாகப் பள்ளிகளைத் தொடங்கினார். ஆனால், போதிய நிதி வசதி யின் மையாலும் அரசியல் கட்டுப்பாட்டினாலும் அவை நன்கு சிறக்களில்லை. எப்படியோ இக் காலத்தில் அவர் கல்வி பற்றிய தமது புகழ் பெற்ற நூல்களை வெளியிட்டார். அவை 'மனிதனின் கல்வி' (The Education of Man), 'கிண்டர் கார்ட்டன் ஆசிரியவியல்' (The Pedagogics of Kindergarten), 'அன்னை விளையாட்டும் செவிலிப் பாடல்களும்' (Mother's Play and Nursery songs), 'படிப்படியான வளர்ச்சிமூலம் கல்வி' (Education by Development) என்பனவாம். இந்நூல்கள் அனைத்தும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி பற்றியே கூறுகின்றன.
பிரோபெல் முழுமைக் கருத்துக் கொள்கையினராக (Absolute Idealist) இருந்தார். அவர் தமது நூல்கள் அனைத் திலும் 'வேற்றுமையில் ஒற்றுமை' காணும் கருத்தினையும், படிப்படியான வளர்ச்சிக் கொள்கையையும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இவ்வுகை, அனைத்து எல்லையையும் கடந்த இறைவனது முழுமையான படைப்பாகக் கருதினார். 'மனிதனின் கல்வி' என்னும் தமது நூலில் அவர் 'எப்பொழுதும் நிலையாக வெளிப்படும் ஓர் ஒருமைப்பாடுடைய ஒரு முழு மொத்த உயிர்ப் பொருளே இவ்வுலகம்' என்று எழுதியுள்ளார். இவ்வகையான ஒருமைப்பாடு இயற்கையின் புறத தோற்றத்திலும், உள் உணர்விலும் வெளிப்படுகிறது. அக உணர்வும், புறவுலகப் பொருளும் இணைந்ததொரு கூட்டே வாழ்க்கையாகும். மனம் அல்லது உணர்வு இல்லையாயின், பொருள் உயிரற்றதாகவும், வடிவ மற்றதாகவும் ஆகிவிடும், ஒவ்வோர் உயிரியும், ஒவ்வொரு பொருளும் உணர்வினால் உணர்த்தப்படும் பொருளேயாகும்.
இவரது நூல்கள்
[தொகு]- குழவிப் பூங்கா கற்பித்தலியல்
- மனிதனின் கல்வி
- அன்னையின் விளையாட்டும் மழலையர் பாடல்களும்
- விருத்திவழிக் கல்வி
வெளி இணைப்புக்கள்
[தொகு]- குழந்தை உளவியலும் கல்வியும் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்