பிரியங்கா கோசுவாமி
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 10, 1996 முசாப்பர் நகர், உத்தரப் பிரதேசம் |
விளையாட்டு | |
நிகழ்வு(கள்) | 20 கிலோமீட்டர் நடைப்போட்டி |
சாதனைகளும் விருதுகளும் | |
தேசிய இறுதி | 2017, 2021 |
பிரியங்கா கோசுவாமி (Priyanka Goswami) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாள் இவர் பிறந்தார். 20 கிலோமீட்டர் நடைப்போட்டியில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். [1] [2]
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]கோசுவாமி தடகளத்திற்கு மாறுவதற்கு முன்பு சில மாதங்கள் பள்ளியில் சீருடற்பயிற்சி விளையாட்டில் பயிற்சி செய்தார். வெற்றிகரமான தடகளப் போட்டியாளர்களுக்கு அதிகமாகப் பரிசுப் பைகள் கிடைத்ததால், இவர் ஓட்டப்பந்தயங்களால் ஈர்க்கப்பட்டார். [3]
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 கி.மீ ஓட்டப்பந்தயத்தில், திறந்தநிலை இந்திய வெற்றியாளர் போட்டியை வென்றார். பந்தய தொலைவை 1: 28.45 என்ற புதிய இந்திய சாதனையுடன் 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.[2] முன்னதாக இவர் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய வெற்றியாளர் போட்டியையும் வென்றார்.
பிரியங்கா இந்திய ரயில்வேயில் எழுத்தராக பணியாற்றுகிறார். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Priyanka". worldathletics.org. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
- ↑ 2.0 2.1 "National Open Race Walking Championships: Sandeep Kumar, Priyanka Goswami shatter national records, qualify for Tokyo Olympics along with Rahul". First Post. 13 February 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
- ↑ 3.0 3.1 Bhagat, Mallika (17 February 2021). "National record holder Priyanka Goswami: Started race walking for bags that medallists got". hindustantimes.com. https://www.hindustantimes.com/sports/others/national-record-holder-priyanka-goswami-started-race-walking-for-bags-that-medallists-got-101613505659305.html.