உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிதிவிராசு கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிதிவிராசு கபூர்
Prithviraj Kapoor
ஏக் ராத் (1942) படத்தில் பிரிதிவிராசு கபூர்
பிறப்புபிரிதிவிநாத் கபூர்
(1906-11-03)நவம்பர் 3, 1906
சாமுத்திரி, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (நவீன பஞ்சாப், பாக்கித்தான்)
இறப்பு29 மே 1972(1972-05-29) (அகவை 65)
மும்பை, இந்தியா
கல்விஇலயால்பூர் கல்சா கல்லூரி, இலயால்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஈசுவர்தாசு கல்லூரி, பெசாவர் (இளங்கலை)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1927–1972
வாழ்க்கைத்
துணை
ராம்சர்னி மெக்ரா (தி. 1923)
பிள்ளைகள்ராஜ் கபூர், சம்மி கபூர், சசி கபூர் உட்பட ஆறு பேர்
பதவியில்
3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1960

பிரிதிவிராசு கபூர் (Prithviraj Kapoor) (பிறப்பு: பிரிதிவிநாத் ; 3 நவம்பர் 1906 – 29 மே 1972) ஓர் இந்திய நடிகராவார். இவர் பாலிவுட் திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டிருந்தார்.[1] மேலும் இந்திய மக்கள் நாடக சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். தனது சொந்த நாடக நிறுவனமான பிருத்வி அரங்கத்தை 1944இல் மும்பையில் நிறுவினார்.

இந்தித் திரைப்படங்களின் கபூர் குடும்பத்தின் மூதாதையராக இருந்த இவர், அதில் நான்கு தலைமுறைகள், இவருடன் தொடங்கி, இந்தி திரைப்படத் துறையில் நடித்துள்ளனர். இளைய தலைமுறை இன்றும் பாலிவுட்டில் செயலில் உள்ளது. இவரது தந்தை பசேசுவர்நாத் கபூரும் இவரது ஆவாரா படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்தார். இந்தியத் திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1969 இல் பத்ம பூசண் விருதையும், 1971 இல் தாதாசாகெப் பால்கே விருதையும் வழங்கி கௌரவித்தது.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

பிருத்விராஜ் கபூர் பிருத்விநாத் என்ற பெயரில் 1906 நவம்பர் 3 அன்று பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் உள்ள இலயால்பூருக்கு அருகிலுள்ள சாமுத்திரியில் பஞ்சாபி இந்து கத்ரி குடும்பத்தில் பிறந்தார்.[2][3][4][5][3] இவரது தந்தை திவான் பசேசுவர்நாத் கபூர் காவல்துறையில் அதிகாரியாக இருந்தார். இவரது தாத்தா திவான் கேசவ்மல் கபூர் மற்றும் கொள்ளு தாத்தா திவான் முரளிமல் கபூர் ஆகியோர் இலயால்பூருக்கு அருகிலுள்ள சமுத்திரியில் தாசில்தார்களாக இருந்தனர்.[6] பிரிதிவிராசு கபூர் எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவர். இவரது சகோதரர் திரிலோக் கபூரும் ஒரு நடிகராவார். திரைப்பட தயாரிப்பாளர் சுரீந்தர் கபூர், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனில் கபூர், போனி கபூர் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவார்.[7]

கபூரின் குழந்தைப் பருவம் பெரும்பாலும் தாத்தா பாட்டி மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்த இலயால்பூரில் கழிந்தது. பின்னர், இவரது தந்தை வடமேற்கு எல்லைப்புற மாகாணமான பெசாவருக்கு மாற்றப்பட்டார். கபூர் ஆரம்பத்தில் இலயால்பூர் கல்சா கல்லூரி, பின்னர் எட்வர்டெஸ் கல்லூரியிலும் படித்தார். அங்கு இவர் தனது இளங்கலை கலை பட்டம் பெற்றார்.[8][9] இவர் நடிப்புக்குச் செல்ல முடிவு செய்வதற்கு முன்பு ஒரு வருடம் சட்டப் படிப்பையும் பயின்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

கபூர் , இலயால்பூர் மற்றும் பெசாவர் திரையரங்குகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1928 ஆம் ஆண்டில், மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு இம்பீரியல் பிலிம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.[10][11] 1929 ஆம் ஆண்டில், தனது முதல் படமான பே தாரி தல்வார் படத்தில் கூடுதல் நடிகராக அறிமுகமானார்.[12][11] 1930 இல் வெளியான சினிமா கேர்ள் என்ற தனது மூன்றாவது படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.[13]

பே தாரி தல்வார், சினிமா கேர்ள், ஷேர்-இ-அரப் மற்றும் பிரின்ஸ் விஜய்குமார் உள்ளிட்ட ஒன்பது ஊமைத் திரைப்படங்களில் நடித்த பிறகு, கபூர் இந்தியாவின் முதல் பேசும் திரைப்படமான ஆலம் ஆரா (1931)[14][15] படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்தார்.[16][17] பின்னர் வித்யாபதி (1937) படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. சொராப் மோடி சிக்கந்தர் (1941) படத்தில் பேரரசர் அலெக்சாந்தர் கதாபாத்திரத்தில் நடித்ததே இவரது மிகவும் பிரபலமான நடிப்பாகும். ஒரு வருடம் மும்பையில் முகாமிட்டிருந்த ஆங்கில நாடக நிறுவனமான கிராண்ட் ஆண்டர்சன் தியேட்டர் நிறுவனத்திலும் சேர்ந்து நடித்து வந்தார்.[13] திரைப்பட முயற்சி இருந்தாலும் கபூர் நாடகத்திலும் அர்ப்பணிப்புடன் இருந்தார். தொடர்ந்து மேடையில் நடித்தார். மேடை மற்றும் திரை இரண்டிலும் மிகச் சிறந்த மற்றும் பல்துறை நடிகராக இவர் நற்பெயரை வளர்த்துக் கொண்டார்.

பிருத்வி திரையரங்குகள்

[தொகு]
சிக்கந்தர் திரைப்படத்தில் கபூர் (1941)
பிருத்வி அரங்கம் மற்றும் பிருத்விராசு கபூருக்கு இந்திய அஞ்சல் துறை 1995 ஆம் ஆண்டு ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.

1944 வாக்கில், கபூர் பிருதிவி அரங்கம் எனும் தனது சொந்த நாடகக் குழுவை நிறுவினார். பிருத்வி அரங்கம், அதன் காளிதாசனின் அபிஞான சாகுந்தலம் என்ற நாடகத்தை முதலில் மேடையில் நிகழ்த்தியது. இவரது மூத்த மகன் ராஜ் கபூர் 1946 ஆம் ஆண்டு வரை தயாரித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக இருந்ததால், இது ஒரு ஊக்கமான காரணியாகவும் இருந்தது. பிருத்விராசு பிருத்வி அரங்கங்களில் முதலீடு செய்தார். இது இந்தியா முழுவதும் மறக்கமுடியாத நாடகங்களை அரங்கேற்றியது. இந்த நாடகங்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருந்தன. மேலும் இந்திய விடுதலை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவித்தன.16 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நாடக அரங்கம் சுமார் 2,662 நிகழ்ச்சிகளை நடத்தியது.[11] ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிருத்விராசு முன்னணி நடிகராக நடித்தார். பதான் (1947) இவரது பிரபலமான நாடகங்களில் ஒன்று என்று கருதப்பட்டது. 1947 ஏப்ரல் 13 அன்று முதலில் மேடையேறிய இது மும்பையில் கிட்டத்தட்ட 600 முறை மேடையில் நிகழ்த்தப்பட்டது. ஒரு முஸ்லிம் மற்றும் அவரது இந்து நண்பரின் கதையாகும்.

அடுத்தடுத்த ஆண்டுகள்

[தொகு]

1960இல் வெளியான முகல்-இ-அசாம் படத்தில் முகலாயப் பேரரசர் அக்பராக நடித்தார். இது இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, அரிச்சந்திர தாராமதி (1963) படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சிக்கந்தர்-இ-ஆசாம் (1965) படத்தில் போரஸாகவும், கல் ஆஜ் அவுர் கல் (1971) படத்தில் வயதான தாத்தா வேடத்திலும் நடித்தார். இப்படத்தில் தனது மகன் ராஜ் கபூர் மற்றும் பேரன் ரந்தீர் கபூருடன் தோன்றினார்.[11]

மதம் சார்ந்த புகழ்பெற்ற பஞ்சாபி திரைப்படமான நானக் நாம் ஜஹாஸ் ஹை (1969) படத்தில் கபூர் நடித்தார். இது பஞ்சாபில் மிகவும் மதிக்கப்படும் ஒரு திரைப்படமாகும்.

அதைத் தொடர்ந்து நானக் துகியா சப் சன்சார் (1970) மற்றும் மேலே மித்ரன் தே (1972) ஆகிய பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்தார்.

கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் இயக்கிய சாக்ஷத்கரா (1971) என்ற கன்னட படத்திலும் ராஜ்குமாரின் தந்தையாக நடித்தார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

[தொகு]
பிருத்திராசு கபூருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் விருது வழங்கும் காட்சி.

1954 ஆம் ஆண்டில், இவருக்கு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது, 1969 ஆம் ஆண்டில், இந்திய அரசால் பத்ம பூசண் வழங்கப்பட்டது. மேலும் எட்டு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.[17]

1971ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது இவரது மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. இந்தியத் திரைப்படத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபர் இவர் ஆவார்.

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Pran receives Dadasaheb Phalke Award". Coolage.in. 14 April 2013. Archived from the original on 4 January 2014. பார்க்கப்பட்ட நாள் 4 January 2014.
  2. "Prithviraj Kapoor to Kareena Kapoor and Ranbir Kapoor". indiamarks.com. 4 June 2012. Archived from the original on 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
  3. 3.0 3.1 "Prithviraj Kapoor (Indian actor)". Encyclopædia Britannica. Archived from the original on 3 October 2013. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  4. Lutfullah Khan. "Prithviraj Kapoor Interview". Youtube. Khursheed Abdullah on Youtube.
  5. Gooptu, Sharmistha (2010). Bengali Cinema: 'An Other Nation'. Taylor & Francis. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-84334-5.
  6. "Bollywood's First Family". Rediff. 2 February 2006. Archived from the original on 20 February 2011. பார்க்கப்பட்ட நாள் 14 February 2011.
  7. "Surinder Kapoor & Prithviraj Kapoor". 4 May 2009 இம் மூலத்தில் இருந்து 2 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160302162736/http://movies.rediff.com/report/2009/may/04/surinder-kapoor-on-life-and-times.htm. 
  8. "Remembering Prithviraj Kapoor!". 2 November 2009. Archived from the original on 9 July 2020. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
  9. Ahmed, Ishtiaq (7 November 2006) Prithviraj Kapoor: A centenary tribute. Daily Times
  10. "Prithviraj Kapoor (Indian actor)". Encyclopædia Britannica. Archived from the original on 3 October 2013. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  11. 11.0 11.1 11.2 11.3 Remembering Prithviraj Kapoor: 10 facts you must know about the Father of Bollywood பரணிடப்பட்டது 10 சூலை 2020 at the வந்தவழி இயந்திரம், India Today, 3 November 2016.
  12. Rishi Kapoor, Shabana Azmi remember a compassionate human on 113th birth anniversary of Prithviraj Kapoor: 'The man who started it all' பரணிடப்பட்டது 8 சூலை 2020 at the வந்தவழி இயந்திரம், Hindustan Times, 3 November 2019.
  13. 13.0 13.1 "Kissing the firmament with Prithvi Theatre". 22 November 2004 இம் மூலத்தில் இருந்து 31 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080731165953/http://www.hindu.com/mp/2004/11/22/stories/2004112201500100.htm. 
  14. Goddard, John. "Missouri Masala Fear not, St. Louisans: You don't need to go to Bombay to get your Bollywood fix" Riverfront Times, St. Louis, Missouri, 30 July 2003, Music section.
  15. Gokulsing, K. (2004). Indian popular cinema: a narrative of cultural change. Trentham Books. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85856-329-1. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  16. "Be Dhari Talwar (1929)". Imperial. Archived from the original on 8 February 2017. பார்க்கப்பட்ட நாள் 10 October 2020.
  17. 17.0 17.1 "Tribute to Prithvi Raj Kapoor (1901–1972)". International Film Festival of India. Archived from the original on 21 July 2011.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prithviraj Kapoor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிதிவிராசு_கபூர்&oldid=4045034" இலிருந்து மீள்விக்கப்பட்டது