பிரிதிபால் சிங் மைனி
பிரிதிபால் சிங் மைனி Prithipal Singh Maini | |
---|---|
பிறப்பு | பஞ்சாப், இந்தியா |
பணி | எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் |
அறியப்படுவது | எலும்பு வெட்டு இணைப்பு |
வாழ்க்கைத் துணை | மருத்துவர் |
விருதுகள் | பத்ம பூசண் நிசான்-இ-கல்சாவின் உத்தரவு |
பிரிதிபால் சிங் மைனி (Prithipal Singh Maini) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். புது தில்லி சர் கங்கா ராம் சிட்டி மருத்துவமனையில் மூத்த ஆலோசகராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவு பணியில் உள்ளார். [1] புது தில்லியில் உள்ள சாமா மருத்துவமனையில் எலும்பியல் நிபுணர் ஆலோசகராகவும் உள்ளார். [2]
பிரிதிபால் சிங் மைனி பல்வேறு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை முயற்சிகளை நிர்வகித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல மருத்துவப் பள்ளிகளில் கற்பித்தும் உள்ளார். [3] மகரிசி தயானந்த் பல்கலைக்கழகத்தின் கௌரவ
பேராசிரியராகவும், மலிவு விலையில் சுகாதார சேவையை ஊக்குவிக்கும் அமைப்பான பாத்ஃபைண்டர் சுகாதார இந்தியா குழுமத்தின் [4] துணைத் தலைவராகவும் உள்ளார். [5] 2001 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாசு சிங் பாதல் வீழ்ச்சியடைந்தபோது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து தொடை எலும்பு முறிவை சரிசெய்தவர் பிரிதிபால் சிங் மைனி என்பது குறிப்பிடத்தக்கதாகும். [6] 2001 ஆம் ஆண்டில் பஞ்சாப் முதல்வரிடமிருந்து நிசான்-இ-கல்சா கௌரவத்தைப் பெற்றார் [7] [8] இந்திய மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2007 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூசன் விருதை வழங்கியது. [9]
மருத்துவர் பிரிதிபால் சிங் மைனி 27 மார்ச் 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று இறந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Department of Orthopedics". SGR City Hospital. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "Dr. PS Maini on Practo". Practo. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "Dr. Prithipal Singh Maini, Director". India Mart. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "Executive Profile". Bloomberg. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "Pathfinder Health India launches First Family Medical Centre". Pathfinder. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "Badal operated upon". The Tribune. 21 November 2001. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ "Order of Nishan-e-Khalsa winners". The Tribune. 14 April 2001. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
- ↑ Punjab 2000: Political and Socio-economic Developments. Anamika Publishers & Distributors. 1 January 2001.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
புற இணைப்புகள்[தொகு]
- "Dr PS Maini Giving a Performance in Padma Awardees Meet". YouTube video. KK Agarwal. 2 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.