உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிட்சு ஏபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிரிட்சு ஏபர்
பிறப்புடிசம்பர் 9, 1868
பிரெசுலாவு, ஜெர்மனி
இறப்பு29 சனவரி 1934( 1934-01-29) (அகவை 65)
பாசெல், சுவிச்சர்லாந்து
தேசியம்ஜெர்மானியர்
துறைஇயல் வேதியியல்
பணியிடங்கள்ஈடிஎச் சூரிக்
கார்ல்சியோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம்
பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ராபர்ட் பன்சன்
அறியப்படுவதுஉரங்கள், வெடிமருந்து, ஹேபர் முறை, ஹேபர்-வெய்ஸ் தாக்கம், வேதிப் போர்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1918)

ஃபிரிட்சு ஏபர் (Fritz Haber, டிசம்பர் 9, 1868 - ஜனவரி 29, 1934) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர்[1]. இவர் 1886 லிருந்து 1891 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் (இன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகம்) ராபர்ட் பன்சனின் கீழும் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவரது மனைவி கிளாரா இம்மெர்வாரும் ஒரு வேதியியலாளர். ஹேபர் மேக்சு பார்ன் உடன் இணைந்து பார்ன்-ஹேபர் சுழற்சியைக் கண்டுபிடித்தார். “வேதிப் போர் முறையின் தந்தை” என்றும் அறியப்படுகிறார். அமோனியா வாயுவினை அதன் பகுதிக்கூறு தனிமங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முறையினைக் கண்டுபிடித்ததற்காக 1918 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Fritz Haber - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Fritz Haber - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்சு_ஏபர்&oldid=3295425" இலிருந்து மீள்விக்கப்பட்டது