பிராசினோச்டீராய்டுகள்
பிராசினோஸ்டீராய்டுகள் (Brassinosteroids) ஒரு தனித்துவமிக்க தாவர வளரூக்கியாகும். இது தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும். இவை தாவரத்திணைகளில் உள்ள பெரும்பாலானத் தாவரங்களில் உள்ள வித்து, விதை மற்றும் இளம்திசுக்களில் காணப்படுகின்றன. இது பல தொகுதிக்கொண்ட ஸ்டீராய்டுகளால் ஆன ஆறாவது வகைத் தாவரவூக்கியாகும்.
வரலாறு
[தொகு]இதை நாற்பது ஆண்டிற்கு முன்பு மிட்சேல் மற்றும் உடன் அலுவலர்கள், பிராசிகா நாபசு என்னும் தாவரத்தின் வித்திலிருந்து பெறப்பட்ட கரிம வடிமமானது, தண்டு வளர்ச்சியையும் மற்றும் உயிரணுப்பகுப்புகளையும் கூட்டுகிறது எனவும் அறிவித்தனர் [1]. இதை முதன்முதலில் பிராசிகா என்னும் ரேப்சீட் இனத்தாவரத்திலிருந்து பெறப்பட்டதால் இவை பிராசினோச்டீராய்டுகள் எனப் பெயர்ப்பெற்றன. இக்கரிமவடிமத்திலிருப்பது தனித்துவமான தாவர வளரூக்கியென அறிந்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் பிராசினோலைடு என்னும் சேர்மத்தை 1979 ஆண்டு முதன்முதலில் பிரித்தெடுத்தனர். இது தாவரத்தின் வளர்பண்புகளை ஊக்குவிக்கிறதென அறிவிக்கப்பட்டது. இப்பிராசினோஸ்டீராய்டுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கை 1980 வாக்கிலேயே நூறைத்தாண்டியது[2].
இது தாவரத்தின் வளரூக்கி என்பதில் நிலவிய குழப்பம், மரபியல் சார்ந்து உருவாகும் விதம் அதன் குறியிடைக்கடத்தல் (Signal transduction) தன்மையை அலசியதில் இவை தாவரத்தின் முக்கிய நெறிப்படுத்தி என்பது தெளிவாக்கியது. இவை ஆக்சின், சிப்ரல்லின், சைட்டோகைனின், அப்சிசிக் காடி மற்றும் எதிலீன் ஆகியவைகளுடன் இணைந்த ஆறாவது தாவரவூக்கியென அறிவிக்கப்பட்டது [3].
வகைகள்
[தொகு]பிராசினோலைடு, 24 - எபிபிராசினோலைடு மற்றும் 28 - ஓமோபிராசினோலைடு ஆகியன் பிராசினோச்டீராய்டுகளாகும். இவை வேளாண்மையில் வெவ்வேறு பயிர்களின் ஊக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
செயல்கள்
[தொகு]இஸ்டீராய்டுகள் விலங்கு, பூச்சிகளில் ஊக்கிகளாக செயல்படுகின்றன. தாவரத்தில் பல கண்டறியப்பட்டாலும் பிராசினோச்டீராய்டுகளே தாவரத் திணைகளில் பரவலாக காணப்படுகிறது. உடற்செயலியல் ஆய்வில் பல வகையான உயிரணுக்களின் மாற்றத்திற்குத் தேவையானவை என அறியப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
- தாவரங்களின் தண்டு வளர்ச்சி - பிராசின் செயல்
- வித்துக்குழல் வளர்ச்சி
- இலை மடிப்பு மற்றும் மேன்முன்னிலை அசைவு (epinasty)
- வேர் வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தடுப்பு
- எதிலீன் ஊக்கியின் உயிரிணைவாக்கத்தின் உந்துதல்
- புரோட்டானேற்றி கிளிவூட்டல்
- தாரு/காழ்த்திசுக்கள் வேறுபாடு
- மரபணு வெளிப்பாடு நெறிப்படுத்துதல் ஆகியவைகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது [4].
பயன்கள்
[தொகு]வேளாண்மையில் பயிர்களின் மகசூலைப் பெருக்கியும், வறட்சி, உயர்வெப்பத்தாக்கம் மற்றும் தகைவைத் தாங்கக்கூடியப் பண்பையும் தருகின்றது. இதன் கண்டுபிடிப்பிற்குப் பிறகுத் தொடர்ந்த பல ஆய்வுகளில், மியூடா என்பவர் பிராசினோலைடுகள் பச்சடுக்கீரை, முள்ளங்கி, புதிர் அவரை, மிளகு ஆகியவைகளில் உற்பத்தி அதிகறிக்கிறது என விளக்கினார்.
தழைத் தெளிப்பானாக - கோதுமை, கடுகு, நெல், சோளம், தேயிலை ஆகியவைகளிலும் புறவழியாக முள்ளங்கியில் கொடுக்க விளைச்சல் மற்றும் உற்பத்திக்கூடும்.
- பிராசினோலைடுகள் - சக்கரைவள்ளிக்கிழங்கு, ரேப்விதைகள் மற்றும் இதர தானியங்களின் வளர்ச்சிக்கும்
- 24 - எபிபிராசினோலைடுகள் - சோளம், தேயிலை, தர்ப்பூசணி, வெள்ளரி, திராட்சைக்கும்
- 28 - ஓமோபிராசினோலைடுகள் - நிலக்கடலை மற்றும் தக்காளியில் அதிக மகசூலை ஈட்டுகிறது[5].
- சீனாவில், 28 - ஓமோபிராசினோலைடுகள் -புகையிலை, கரும்பு, ரேப்விதை மற்றும் தேயிலையிலும்;
- ருசியாவில், 24 - உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளரி, மிளகு மற்றும் பார்லியிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
- இந்தியாவில் பிராசினோச்டீராய்டுகளைக் கீழ்வருமாறு பயன்படுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது:
- இவைகளைத் தழை தெளிப்பான்களாக நெல்வெளிகளில் பூக்கும்முன் தெளிக்க தானிய உற்பத்தி கூடும்
- தானியங்களுள் கம்பில் முப்பதாவது மற்றும் ஐம்பதாவது நாளில் தெளிக்க மகசூல் அதிகரிக்கும்[6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mitchell JW, Mandava NB, Worley JF, Plimmer JR, Smith MV. 1970 "Nature" 281: 216-217.
- ↑ Fujioka S, Sakurai A. 1997. Biosynthesis and metabolism of brassinosteroids. Physiologia Plantarum 100:710–15.
- ↑ Clouse SD, JM Sasse.1998. Brassinosteroids: Essential regulaors of plant growth and development. Annu. Rev. Plant Physiol. Plant Mol. Biol. 49: 427 - 451.
- ↑ Li JM, Chory J. 1997. A putative leucine rich repeat receptor kinase involved in brassinosteroid signal transduction. Cell 90:929–38
- ↑ Rao SSR, Vardhini BV, Sujatha E, Anuradha S. 2002. Brassinosteroids – A new class of phytoharmones. Current Science. 82(10): 1239 – 1245.
- ↑ http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_yield_improve_ta.html