பிரபா சட்டர்ஜி
பிரபா சட்டர்ஜி
| |
---|---|
தேசியம் | இந்தியன் |
அல்மா பொருள் | இந்திய அறிவியல் கழகம் |
விருதுகள் | வாஸ்விக் விருது, இந்திய பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர் சங்க விரிவுரை விருது |
பிரபா ஆர். சட்டர்ஜி (Prabha Chatterji) என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள ஜான் எப். வெல்ச் தொழில்நுட்ப மையத்தில் (முன்னர் ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்), பணிபுரிந்து வருபவர் ஆவார்.[1]
இவர் முன்பு ஐதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த அறிவியலாளராகவும், இந்தியாவின் உயிரியல் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்புகளுக்கான சங்கத்தின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2][3] இவர் முதன்மையாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியுடன் தொடர்புடையவர்.[1]
கல்வி
[தொகு]இவர் கேரளாவில் ஒட்டப்பாலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரி மாணவியாக, இருக்கும்போது இவருக்குப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் தேசிய அறிவியல் திறமை தேடல் உதவித்தொகையினை வழங்கியது. இதன் மூலம் முதுநிலைப் பட்டத்தினையும் 1977-ல் முனைவர் பட்டப்படிப்பினையும் முடித்தார்.[4] முனைவர் பட்ட ஆய்விற்குப் பின்னர் அறிவியலில் தொடர இந்த உதவித்தொகை உதவியது.[5]
பணி
[தொகு]பிரபாவின் வாழ்க்கைப் பாதையானது கல்வித்துறையில் அரசாங்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளது.[5] தொழில்துறை ஆராய்ச்சிக்கான வாஸ்விக் விருதையும், இந்திய பொருள் அறிவியல் சங்க விரிவுரை விருதையும் பெற்றார்.[4] இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் கொள்கைகளிலும் வகுப்பதிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.[4]
வெளியீடு
[தொகு]சாட்டர்ஜி 41 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவருடைய எச். சுட்டிக்காட்டி 16 ஆகும்.
விருதுகள்
[தொகு]சட்டர்ஜி வாஸ்விக் விருதினையும் (தொழில்துறை ஆராய்ச்சி)[3] இந்திய பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர் சங்க விரிவுரை விருதினையும் பெற்றவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Prabha Chatterji". Women in science: an Indian Academy of Sciences initiative. Indian Academy of Sciences. 2007. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
- ↑ "Executive committee for 2011-2014". Society for Biomaterials and Artificial Organs - India. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
- ↑ 3.0 3.1 "Smt. Chandaben Mohanbhai Patel Industrial Research Award for Women Scientists". Archived from the original on 26 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 "The Women Scientists of India | Women in Science | Initiatives | Indian Academy of Sciences". www.ias.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
- ↑ 5.0 5.1 Lilavati's Daughters: The Women Scientists of India.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help)