உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபஞ்ச அழகி 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ்

பிரபஞ்ச அழகி 2011 (Miss Universe 2011 மிஸ் யுனிவர்ஸ் 2011 ) போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்வின் இறுதிப் போட்டி செப்டம்பர் 12 2011இல் நடைபெற்றது. அங்கோலா நாட்டின் அழகியான இவர் வணிகப் படிப்பு மாணவியாவார்.

மிஸ் யுனிவர்ஸ் 2011 போட்டிக்கு இத்தடவை உலகின் பல பாகங்களில் இருந்தும் 89 நாட்டின் அழகிகள் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த சுற்றுகளில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஆத்திரேலியா, கோஸ்டோரிகா, பிரான்ஸ், யுக்ரெய்ன், போர்த்துக்கல், பனாமா, பிலிப்பைன்ஸ், அன்கோலா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகளாவர்;. இறுதிப்போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார். இவருக்கு மெக்ஸிகோ நாட்டின் கடந்த வருட மிஸ் யுனிவர்ஸான க்ஸினிமா நவரெட்டே மகுடத்தைச் சூட்டினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபஞ்ச_அழகி_2011&oldid=1363993" இலிருந்து மீள்விக்கப்பட்டது