பிரதிமா காவோங்கர் மரணம்
பிரதிமா காவோங்கர் மரணம் (Death of Pratima Gaonkar) 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. பிரதீமா காவோங்கர் என்பவர் ஓர் இளம் இந்திய ஊடுபாலின தடகள வீரரும் நீச்சல் வீரரும் ஆவார். கோவாவில் உள்ள ஒரு கிணற்றில் இவர் இறந்து கிடந்தார்.[1] தற்கொலை மூலம் இம்மரணம் நிகந்துள்ளது என காரணம் கூறப்பட்டு அடையாளம் காணப்பட்டது. பாலின சரிபார்ப்பு சோதனையில் தோல்வியுற்றதை வெளிப்படுத்திய அறிக்கை காவோங்கரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. காவோங்கர் தனது பயிற்சியாளர் அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு உட்பட்டதாக அவரது தாயார் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.
கோவாவின் சத்கல் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனது மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு புருனேயில் நடந்த இளையோர் ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 4×400 தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2][3] முன்னதாக இவர் அனைத்து கோவா மாநில அளவிலான சாதனைகளையும் முறியடித்தார்.[4]
இவரது மரணத்திற்குப் பிறகு, ஊடகங்களின் கவனமும் அறிக்கையிடலும் இதை மையப்படுத்தியே இருந்தது, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவரது உடல் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.[5][6] ஒரு பாலின விளையாட்டு வீரராக அவரது மரணத்தைச் சுற்றியுள்ள பொது விவாதம் துத்தி சந்த் மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த காசுடர் செமன்யாவுடன் ஒப்பிடுவதற்கும் வழிவகுத்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Goa News |Mystery of Pratima's suicide (By: SANDESH PRABHUDESAI, PANAJI)". 2022-01-21. Archived from the original on 2022-01-21. Retrieved 2022-11-09.
- ↑ "The rising star who ended her life much before Dutee Chand challenged the rules". https://indianexpress.com/article/sports/sport-others/the-girl-before-dutee-chand-pratima-gaonkar-5346699/.Koshie, Nihal (9 September 2018). "The rising star who ended her life much before Dutee Chand challenged the rules". The Indian Express. Retrieved 10 September 2018.
- ↑ "Pratima GAONKAR | Profile | World Athletics". worldathletics.org. Retrieved 2022-11-06.
- ↑ "Goa's Pinki Pramanik". https://www.newslaundry.com/2012/07/21/goas-pinki-pramanik.Nagvenkar, Mayabhushan (21 July 2012). "Goa's Pinki Pramanik". Newslaundry. Retrieved 10 September 2018.
- ↑ Dohle, Max (2020-06-19). "They say I'm not a girl": Case Studies of Gender Verification in Elite Sports (in ஆங்கிலம்). McFarland. ISBN 978-1-4766-3701-3.
- ↑ Behind the News: Voices from Goa's Press (in ஆங்கிலம்). Goa1556. 2008. ISBN 978-81-905682-0-3.
- ↑ "5 Female Athletes Around The World Who Have Been Subjected To Gender & Sex Tests". ScoopWhoop (in ஆங்கிலம்). 2021-10-16. Retrieved 2022-11-06.