உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகாசு மெகரோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரகாசு மெகரோத்ரா (Prakash Mehrotra)[1] (26 பிப்ரவரி 1925 - 7 மார்ச் 1988) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 ஏப்ரல் 1976 முதல் ஆகத்து 9, 1981 வரை உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் அசாம் மற்றும் மேகாலயாவின் ஆளுநராக 10 ஆகத்து 1981 முதல் 28 மார்ச் 1984 வரை பணியாற்றினார்.[2][3] இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இவர் பிரீத்தி மெகரோத்ராவை மணந்தார். இவர்களுக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளார். இவருடைய மகன், இரவி பிரகாசு மெகரோத்ரா, இந்திய உச்ச நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராக உள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "High Commission of India, London, United Kingdom : Former High Commissioners of India to the United Kingdom". www.hcilondon.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  2. "Governors of Assam since 1937 onwards". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  3. "Former Governors Meghalaya". Rajya Bhavan Meghalaya. 13 December 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  4. "Rajya Sabha Members" (PDF). Rajya Sabha. 2003. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாசு_மெகரோத்ரா&oldid=3407470" இலிருந்து மீள்விக்கப்பட்டது