பிமோலா குமாரி
Appearance
சாரங்பம் பிமோலா குமார் Sarungbam Bimola Kumari Devi | |
---|---|
பிமோலா குமாரி பத்ம சிறீ விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியிடமிருந்து பெறுகிறார். | |
பிறப்பு | மணிப்பூர், இந்தியா |
பணி | மருத்துவர் |
செயற்பாட்டுக் காலம் | 1979 முதல் |
அறியப்படுவது | கிராமப்புற மருத்துவ சேவை |
விருதுகள் | பத்மசிறீ டாக்டர் அம்பேத்கார் அனைத்துலக விருது |
சாரங்பம் பிமோலா குமாரி தேவி (Sarungbam Bimola Kumari Devi) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் நகரின் மேற்கு மண்டலத்தின் முதன்மை மருத்துவராகப் பணியாற்றினார்.[1][2]. மணிப்பூர் மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பெரும்பாலும் இவர் கிராமப்புறங்களிலே மருத்துவ சேவையாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தந்தபோது இரண்டு முறையும் இவரே பிரதமரின் உணவு பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்தார்.[3]. 2014ஆம் ஆண்டில் டாக்டர். பி. ஆர். அம்பேத்கார் அனைத்துலக விருது பிமோலா குமாரிக்கு வழங்கப்பட்டது.[3]. மேலும் 2015ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India Medical Times". India Medical Times. 26 January 2015. Archived from the original on 23 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "DNA India". DNA India. 25 January 2015. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
- ↑ 3.0 3.1 "State doctor to be conferred Padma Shri". Imphal Free Press. 2015 இம் மூலத்தில் இருந்து 18 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181018082653/https://www.ifp.co.in/page/items/25084/state-doctor-to-be-conferred-padma-shri. பார்த்த நாள்: 20 February 2015.
- ↑ "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.