பிணை ஆற்றல்
பிணைப்பு ஆற்றல் (Binding energy) என்பது ஓர் அணுக்கருவைச் சிதைத்து அதில் இயைந்துள்ள புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வெளிக் கொண்டுவருவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலை பிணை ஆற்றல் என்கிறோம்.
பகுதிப்பொருட்களின் நிலை ஆற்றல்களின் கூடுதலைவிட கட்டமைந்த பொருளின் நிலை ஆற்றல் குறைவாக இருக்கும். இதனாலேயே இவ்வமைப்பு ஒன்றாக இணைந்து காணப்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து ஓர் அணுக்கருவை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றலையும் அணுக்கரு பிணை ஆற்றல் என்கிறோம். அணுக்கரு உருவாகும் போது இழக்கப்பட்ட பொருண்மையிலிருந்து இந்த ஆற்றல் பெறப்படுகிறது. இந்த வரையறை நேர்மறை பிணைப்பு ஆற்றலைக் குறிக்கிறது.
ஒருவேளை வழங்கப்படும் ஆற்றல் பிணைப்பு ஆற்றலை விட அதிகமாக இருந்தால் பிரிக்கப்பட்ட பகுதிப் பொருள்கள் பூச்சியமற்ற இயக்க ஆற்றலைக் கொண்டவை எனலாம்.
பொதுச் சிந்தனை
[தொகு]பொதுவாக நோக்குகையில் பிணை ஆற்றல் என்பது ஒரு பொருளை பிணைத்து வைத்திருக்கும் சக்திகளுக்கு எதிராக செய்யப்பட வேண்டிய இயந்திர வேலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அப்பொருளை பகுதிப்பொருள்களை பிரித்தெடுத்து போதுமான இடைவெளியில் வைக்க உதவும் வேலையைக் குறிக்கிறது பிரிக்கப்பட்ட பகுதிகளை மேலும் பிரித்தெடுக்க கூடுதலான வேலை தேவைப்படுகிறது.
கட்டமைந்த முறைகளில் பிணைப்பு ஆற்றல் ஒருவேளை நீக்கப்பட்டால் பிணைக்கப்படாத நிலையின் நிறையை அதிலிருந்து கண்டிப்பாகக் கழிக்க வேண்டும். இதனால் பிணைந்திருக்கும்போது அவ்வமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் ஆற்றல் அல்லது உமிழப்படும் ஆற்றலானது அவ்வமைப்பின் ஆற்றல் நிறையிலும் இழப்பை உண்டாக்குகிறது[1]. கட்டமைப்பின் நிறை இச்செயல்முறையில் பாதுகாக்கப்படுவதில்லை.
பிணை ஆற்றலில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரம் மற்றும் ஆற்றல் அளவில் இயங்குகின்றன. அணுநிறை அதிகரிப்பதைப் பொறுத்து பிணை ஆற்றல்களும் அதிகரிக்கின்றன. மிகக் குறைந்த நிறை எண் கொண்ட அணுக்கருக்கள் மிக அதிகமான பிணை ஆற்றலைக் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ HyperPhysics - "Nuclear Binding Energy". C.R. Nave, Georgia State University. Accessed 7 September 2010. http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/nucene/nucbin.html
புற இணைப்புகள்
[தொகு]- Nuclear Binding Energy
- Mass and Nuclide Stability பரணிடப்பட்டது 2007-08-30 at the வந்தவழி இயந்திரம்
- Experimental atomic mass data compiled Nov. 2003 பரணிடப்பட்டது 2008-09-23 at the வந்தவழி இயந்திரம்