பிக் கிங்
பிக் கிங் இடையீட்டு ரொட்டியின் வட அமெரிக்க வடிவம் (ஏப்ரல் 2016) | |
ஊட்ட மதிப்பீடு - 1 இடையீட்டு ரொட்டி (198 கி) | |
---|---|
38 கி (13%) | |
சீனி | 8 கி |
நார்ப்பொருள் | 2 கி(8%) |
31 கி (48%) | |
நிறைவுற்றது | 11கி (55%) |
மாறுபக்கம் | 1.5 கி |
19 கி (38%) | |
கொழுப்பு | 75 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன |
பிக் கிங் (Big King) ஒரு பர்கர் வகை இடையீட்டு ரொட்டியாகும். பர்கர் கிங் என்ற புகழ் பெற்ற சர்வதேச தொடர் உணவகத்தால் விற்கப்படும் முதன்மையான பர்கர் வகை உணவுப் பொருளாகும். இந்த உணவகத்தின் உணவுப்பட்டியலட்டையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருக்கும் ஒரு அங்கமாகும். அக்டோபர், 2017 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இது விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை.
1996–1997 வரை இது டபுள் சுப்ரீம் என அழைக்கப்பட்டது. இது மெக்டொனால்ட்சு நிறுவனத்தின் பிக் மேக் (3 அடுக்கு ரொட்டி) போன்று வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது மீண்டும் வடிவமைக்கப்பட்டு இன்னும் தரம் வாய்ந்த இரட்டை பர்கராக மாற்றப்பட்டு 1997 இல் ஆண்டில் இதன் சோதனையின் போது தற்போதைய பெயர் சூட்டப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தப் பெயருடன் வழக்கமான இரட்டை பாலாடை பர்கர் வடிவத்தில் நீடித்தது.
இவ்வாறு உருவான விளைபொருளுக்கு 2001 ஆம் ஆண்டில் கிங் சுப்ரீம் எனப் பெயரிடப்பட்து. கார்ப்பரேட்டுகளின் சரிவின் போது உணவு வகைப் பட்டியலில் மாற்றம் கொண்டுவரப்பட்ட போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் செய்யப்பட்ட சிறு வடிவ மாற்றம் கிங் சுப்ரீம் வகை பர்கரை வணிகப் போட்டியிலிருந்து நீக்கி விட்டு ”பிகே ஸ்டாக்கர்" வகை இடையீட்டு ரொட்டிகளின் பக்கமாக மக்களின் பார்வையைத் திருப்பியதெனலாம். இஸ்டாக்கர் வரிசை உணவுகள் நவம்பர் 2013 இல் திரும்ப வந்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொடர முடியவில்லை.
பல ஆண்டு காலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உணவு வகைப்பட்டியலில் இடம் பெறாமல் இருந்தபோதிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடைவிதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தில், பல்வேறு நாடுகளில், பல்வேறு வகைப் பெயர்களுடன் விற்பனையாகி வந்தது. இத்தகைய விற்பனைக்கான உதாரணமானது, பிகேயின் ஐரோப்பிய கிளை நிறுவனமானது வோப்பர் என்ற தனது இடையீட்டு ரொட்டியின் அடிப்படையில், இதன் பெரிய வடிவமான ”பிக் கிங் எக்சு எக்சு எல்” என்ற பெரிய அளவிலான இடையீட்டு ரொட்டியை அறிமுகப்படுத்தியதைக் கூறலாம். எக்சு எக்சு எல் (XXL) வரிசையானது இசுபெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, உடல் நலம் சார்ந்த திட்ட அளவீடுகள் மற்றும் பல நடைமுறைகளில் முரண்களைக் கொண்டுள்ளது. இந்த இடையீட்டு ரொட்டியின் கோழி சேர்க்கப்பட்ட வகையானது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த இடையீட்டு ரொட்டியின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, பர்கர் கிங் நிறுவனம் அவ்வப்போது குறிப்பிட்ட காலம் மட்டும் சந்தையில் கிடைக்கும் சிறப்பு வகை பிக் கிங் ரொட்டிகளை வெளியிடுவதும் உண்டு.
வரலாறு
[தொகு]தொடக்க உற்பத்தி
[தொகு]பிக் கிங் என்ற வகை இடையீட்டு ரொட்டிக்கு முன்னோடியாக இதே போன்ற வெண்ணெய் பர்கரான டபுள் சுப்ரீம் உள்ளது, [1] மெக் டெனால்டு நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், அந்நிறுவனத்தால் 1996 ஆம் ஆண்டில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டு புகழ் பெற்ற பிக் மேக் என்ற இடையீட்டு ரொட்டிக்குப் போட்டியாக, பர்கர் கிங் நிறுவனம் பிக் கிங்கைக் கொண்டு வந்தது, [1][2]மெக் டொனால்டின் சந்தை பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது விற்பனையை அதிகப்படுத்த எண்ணிய பிக் கி்ங் உணவகத் தொடர், டபுள் சுப்ரீம் என்ற பர்கர் வகையை அறிமுகப்படுத்தித் தனது போட்டியாளருக்கு எதிராக விளம்பரம் தேடிக்கொள்ள நம்பிக்கையுடன் முயன்றது, உண்மையில் டபுள் சுப்ரீம் பர்கரானது பிக் மேக்கை அதன் தோற்றத்திலும் இயல்பிலும் ஒத்திருந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 McDowell, Bill (10 February 1997). "Burger King Ads Take Slap at MCD: it's Double Supreme vs. Big Mac while Price Positioning Continues". Advertising Age. http://adage.com/article/news/burger-king-ads-slap-mcd-double-supreme-big-mac-price-positioning-continues/69261/. பார்த்த நாள்: 23 February 2015.
- ↑ "Burger King Plans Its Version Of Big Mac New Burger Is Designed To Steal Market Share From Mcdonald’s". Spokesman-Review. Knight-Ridder. 3 August 1997 இம் மூலத்தில் இருந்து 24 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150224093053/http://m.spokesman.com/stories/1997/aug/03/burger-king-plans-its-version-of-big-mac-new/. பார்த்த நாள்: 17 September 2015.