உள்ளடக்கத்துக்குச் செல்

பா. சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. சரவணன் (P. Saravanan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் ஒரு மருத்துவர். மதுரையில் நரிமேடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[2] இந்தத் தேர்தலில் மருத்துவர் பா. சரவணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் முனியாண்டியை விட 2396 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[3] 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், அதிருப்தியடைந்த அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.[4]

திரைத்துறை பங்களிப்பு

[தொகு]

இவர் முன்னதாக 'அகிலன்', 'சரித்திரம் பேசு' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளிவரவுள்ள தமிழ்த்திரைப்படம் 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் (15 ஆவது சட்டமன்றம்)". தமிழ்நாடு அரசு. Retrieved 14 சூன் 2019.
  2. "திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல்". தினத்தந்தி. 26 ஏப்ரல் 2019. Retrieved 14 சூன் 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Tamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியன் எக்ஸ்பிரஸ். 23 மே 2019. Retrieved 14 சூன் 2019.
  4. "பாஜகவில் இணைந்த இரண்டாவது திமுக எம்.எல்.ஏ! - கு.க.செல்வத்தையடுத்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணனும் பாஜகவில் இணைந்தார்!". நியூஸ் 18 தமிழ். 14 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._சரவணன்&oldid=3943901" இலிருந்து மீள்விக்கப்பட்டது