பா. கல்யாணசுந்தரம்
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பாலசுப்ரமோனியம் கல்யாணசுந்தரம் | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 12 ஆகத்து 1947 கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | கல்லி[1] | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை ஆட்டக்காரர் | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை-மித வேகம்-வேகம் | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | ||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
1966/67–1967/68 | கேரளா | ||||||||||||||||||||||||||
1968/69–1977/78 | தமிழ்நாடு துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 1 மார்ச் 2016 |
பா. கல்யாணசுந்தரம் (B. Kalyanasundaram)(பிறப்பு: ஆகஸ்ட் 12, 1947) என்பவர் இந்திய முன்னாள் முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் தேர்வாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் இயக்குநராகவும் பணியாற்றினார்.
வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]கல்யாணசுந்தரம் ஆகஸ்ட் 12, 1947 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். வலது கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளரான இவர் 1966/67 பருவத்தில் கேரளாவுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தனது மூன்றாவது முதல் வகுப்பு போட்டியில் ஐதராபாத்திற்கு எதிராக 4/49 மற்றும் 6/58 என்ற புள்ளிகளுடன் எனப் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.[2] இவர் இரண்டு பருவங்களுக்குப் பிறகுத் தனது சொந்த மாநில அணியான தமிழகத்திற்கு மாறி பத்து வருடங்கள் விளையாடினார். 1972–73 ரஞ்சி கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தமிழ்நாடு அணியின் ஓர் பகுதியாக இருந்தார். பம்பாய்க்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் மூன்று தொடர் விக்கெட்டுகளை எடுத்த இவர், ரஞ்சி இறுதிப்போட்டியில் தொடர்ந்து மூன்று விக்கெட் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் மொத்தம் 51 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 147 விக்கெட்டுகளை (சராசரியாக 20) வீழ்த்தினார்.[3]
கல்யாணசுந்தரம் தனது துடுப்பாட்ட ஓய்விற்குப்பின் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் தேர்வாளராக ஆனார். 2009ஆம் ஆண்டில் அணியின் மூத்த தேர்வாளர்களின் தலைவராக வருவதற்கு முன்பு, 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட தேர்வுக் குழுவின் தலைவராக பணியாற்றினார். இவருக்குப் பதிலாக 2014ஆம் ஆண்டில் ஸ்ரீதரன் சரத் நியமிக்கப்பட்டார்.[4] 2015ஆம் ஆண்டில், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டா.[5] 2009 மற்றும் 2013க்கு இடையில், உள்நாட்டு துடுப்பாட்ட போட்டிகளில் போட்டி நடுவராக பணியாற்றினார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Frederick, Prince (17 June 2013). "Pitching for cricket". The Hindu. Retrieved 1 March 2016.
- ↑ "Hyderabad v Kerala in 1966/67". CricketArchive. Retrieved 1 March 2016.
- ↑ "Kalyanasundaram". CricketArchive. Retrieved 1 March 2016.
- ↑ "Sharath set to take over from Kalyanasundaram". The Hindu. 3 July 2014. Retrieved 1 March 2016.
- ↑ "Aircel reaffirms support to CSK". The Hindu. 19 March 2015. Retrieved 1 March 2016.
- ↑ "Lists of matches and detailed statistics for Kalyanasundaram". CricketArchive. Retrieved 1 March 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: பா. கல்யாணசுந்தரம்
- Player Profile: பா. கல்யாணசுந்தரம் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து