பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ
பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ Pavel Petrovich Parenago | |
---|---|
பிறப்பு | கிராசுநோதார், உருசியா | 20 மார்ச்சு 1906
இறப்பு | 5 சனவரி 1960 | (அகவை 53)
தேசியம் | உருசியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம், சோவியத் அறிவியல் கல்விக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பால்வெளி வானியல் ஆராய்ச்சி |
விருதுகள் | இலெனின் ஆணை, பிரெதுகின் பரிசு |
குறிப்புகள் | |
பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ (Pavel Petrovich Parenago) (20 மார்ச்சு 1906 – 5 ஜனவரி 1960) ஓர் உருசிய சோவியத் அறிவியளாளரும் வானியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவர் மாச்கோ பல்கலைக்கழக எம். வி. இலமனாசொவ் உடுக்கண வானியல் துறையின் தலைவராக விளங்கினார். இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழக உயர்நில்நி உறுப்பினராக இருந்தார்.[1][2]
இவர் அறிவியல் கல்விக்கழகத்துக்கு 1953 தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு 1954 இல் அக்கழகம் நிறுவிய பிரெதுகின் பரிசை அவ்வாண்டே முதன்முதலில் பெற்றார்.[2]
இவர் தன் கடைசி வாழ்நாளில், பல்லாண்டுகள் தொடர்ந்து வாட்டிய நோயால் நலிவுற்று, 1960 இல் இறக்கும் வரை முந்தைய பணிகளைத் திருத்தியவண்ணம் காலம் கழித்தார்.[1]
தகைமைகள்
[தொகு]இவர் சோவ்யதொன்றிய அறிவியல் பங்களிப்புகளுக்காக இலெனின் ஆணை பெற்றுள்ளார். 2484 பரெனாகோ குறுங்கோளும் நிலாவின் பரெனாகோ குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[1][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Obituary: Pavel Petrovich Parenago". Soviet Astronomy 4: 183–184. 1960. Bibcode: 1960SvA.....4..183..
- ↑ 2.0 2.1 2.2 Rastorguev, A. (April–June 2006). "Pavel Petrovich Parenago All-Russian Astronomical Conference ‘Stellar Systems’". Astronomical and Astrophysical Transactions 25 (2–3): 119–121. doi:10.1080/10556790600918547. Bibcode: 2006A&AT...25..119R. http://images.astronet.ru/pubd/2008/09/29/0001230907/119-121.pdf. பார்த்த நாள்: 13 March 2011.
- ↑ "2484 Parenago". Jet Propulsion Laboratory/California Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.
- ↑ "Parenago". Gazetteer of Planetary Nomenclature. International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.