பாலித் தீவில் சாதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் இந்து சமய மக்களிடையே இந்திய சாதி அமைப்பைப் போன்ற சமூக அமைப்பு முறை உள்ளது.[1][2]கோட்பாட்டளவில் பிராமணர்கள் பாலி இந்து சமயத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர். சத்ரியர்கள் அரசியலுக்கு பொறுப்பாக உள்ளனர். வைசியர்கள் வணிகத்திற்கு பொறுப்பானவர்கள் மற்றும் சூத்திரர்கள் பொதுவானவர்கள். வாங்சா என அழைக்கப்படும் இந்த சாதி தகுதி, பிறக்கும்போதே குறிப்பிடப்பட்டு மரபுரிமையாக உள்ளது.

இருப்பினும் உண்மை மிகவும் சிக்கலாக உள்ளது. பாலித் தீவு விரைவாக இஸ்லாமியமயமாக்கலை அனுபவிக்கும் போது, உயர் சாதி பிராமண பூசாரிகள் பாலித் தீவை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, 15ம் நூற்றாண்டில் சாதி அமைப்பு அதன் இறுதி வடிவத்தை எடுத்தது. பிராமணர்களின் முன்னிலையில், இளவரசர்கள் மற்றும் பிரபுக்கள் மற்றும் அவர்களின் பல குலங்களையும் சத்ரியர் (போர்வீரர்கள்) என வகைப்படுத்தினர். அரசியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டு வகையான அதிகாரங்களுக்கிடையில் சமநிலை இருந்தது. உண்மையில் வைசியர் எனும் சாதி புழக்கத்தில் இல்லாமல் போனது. பாலித் தீவின் மக்கள் தொகையில் 90% பேர் சாமானியர்களான சூத்திரர்கள் பல குலங்கள் மற்றும் துணை குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவைப் போல சாதிகளுக்கிடையேயான சமூக உறவானது ‘தீட்டு’ காரணமாக தவிர்க்கப்படுவதல்ல என்பதே முக்கியப் பிரச்சினை. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் பழகுகிறார்கள். சடங்குகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பாலி சமூகத்தில் மொழி மிகவும் புனிதமான கருதப்படுகிறது. எங்கு, யாருடன் அமருவது மற்றும் தகன மேடையை வைத்திருப்பதற்கான உரிமையில் கூட அந்தஸ்து வேறுபாடுகள் பரவலாக உள்ளது.

மக்கள்தொகையில் பாதி பேர் நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட்டனர். மேலும் கல்வி இந்தோனேசிய மொழியில் வழங்கப்படுகிறது. மேலும் பல பாலித் தீவின் சாமானியர்கள் சுற்றுலா வளர்ச்சி மூலம் செல்வத்தை குவித்து வருகின்றனர். அதே சமயம் சத்திரியா பிரபுக்கள் பெரும் தகன விழாக்களில் தங்கள் பணத்தை வீணடித்து வருகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், செல்வம் பிராமணர்கள் மற்றும் சத்திரியர்களின் கைகளில் இல்லை. ஆனால் சத்திரியர்கள் அரசியல் அதிகாரத்தை மட்டும் இழக்கவில்லை.

பாலியின் நான்கு சாதிகள்[தொகு]

பாலி மக்கள் நால் வருண முறை சமூக அமைப்பு கொண்டது. அதில் பெரும்பான்மையாக வேளாண் சமூகத்தினர் (சூத்திரர்கள்) - பாலித் தீவின் மக்கள் தொகையில் 93% உள்ளனர்.[3] அடுத்து வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் சாதி: அரச குடும்பத்தினர், நிலப் பிரபுக்கள் மற்றும் போர் வீரர்களான சத்ரிய சாதியினர் மூன்றாம் இடத்திலும், அந்தணர்கள் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டு அறிஞர்களான கிராஃபர்ட் மற்றும் ஃபிரைடெரிச் ஆகியோர் பாலி சாதி அமைப்பு, இந்திய வம்சாவளியைக் கொண்டிருந்தது என்று பரிந்துரைத்தனர்.[4] ஆனால் பாலி தீவுக்குச் சென்று தங்கி ஆய்வு செய்த புரூமண்ட் போன்ற அறிஞர்கள் தமது கள அவதானிப்புகள் "பெறப்பட்ட புரிதல்களுடன் முரண்படுவதாக கூறுகிறார். பாலியில், சூத்திரர்களை (பாலியில் சோயத்ரா என்று உச்சரிக்கப்படுகிறது) இவர்கள் பொதுவாக கோயில் பூசாரிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் மக்கள் தொகையைப் பொறுத்து, ஒரு கோயில் பூசாரி மற்ற மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

பெரும்பாலான பிராந்தியங்களில், பொதுவாக இந்து பக்தர்களின் சார்பாக கடவுள்களுக்கு காணிக்கை செலுத்துவதும், பிரார்த்தனைகள் செய்வதும், வேத மந்திரங்கள் ஓதுவதும், பாலி கோயில் திருவிழாக்களின் போக்கை அமைப்பதும் வேளாண் குடி மக்கள் மட்டுமே.[5]

தற்போது சாதியம், மத அமைப்புகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அங்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், பிராமண சாதியைச் சேர்ந்தவர்களை (பெடாண்டாக்கள்) விழாக்களை நடத்தச் சொல்வார்கள். இந்தோனேசியாவில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் போதும் மற்றும் இந்தோனேசிய சுதந்திரத்திற்குப் பிறகும், சாதியக் கட்டமைப்புகளை அரசாங்கம் தடை செய்ததால் பாலித் தீவில் சாதியம் மெல்ல மெல்ல தேய்ந்து வருகிறது.

ஜாவா மற்றும் பாலியில் உள்ள பெரும்பாலான சத்திரியக் குடும்பங்கள் மஜாபாஹித்தின் வீழ்ச்சி மற்றும் ஏராளமான ஜாவானியப் போர்களின் போது அழிந்துவிட்டது. ஏறக்குறைய அனைத்து பாலித் தீவு சத்திரியர்களும், 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த மன்னன் தேவ அகுங்கின் அரச குடும்பத்தில் தங்கள் தோற்றத்தைக் கண்டறிந்துள்ளனர். ஆர்ய தர்மத்தின் வம்சாவளியைக் கோருபவர்கள் போன்ற அசல் சத்திரியர்களில் சிலர் வைசியர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே தேவ அகுங்கின் வம்சாவளியைக் கோருபவர்கள் மட்டுமே பாலியில் சரியான சத்திரியர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.[6]

1950களில் மற்றும் 1960களில் பாலியில் பாரம்பரிய சாதி அமைப்பின் ஆதரவாளர்களுக்கும், அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. பிந்தையவர்களில் பலர் இந்தோனேசியாவின் பொதுவுடமைக் கட்சியுடன் இணைந்திருந்தனர். இது 1965-1966 இந்தோனேசிய படுகொலைகளின் போது சாதிய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஒடுக்கப்பட்டனர். இது சுமார் 80,000 பாலி மக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. அந்த நேரத்தில் இந்தோனேசியா மக்கள் தொகையில் சுமார் 5% பேர் பாலி இந்து சமயத்தினர் இருந்தனர்.[7][8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோளகள்[தொகு]

  1. Jeff Lewis; Belinda Lewis (2009). Bali's silent crisis: desire, tragedy, and transition. Lexington Books. pp. 56, 83–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-3243-2.
  2. Geoffrey Robinson (1995). The Dark Side of Paradise: Political Violence in Bali. Cornell University Press. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8172-4.
  3. Covarrubias, Miguel (November 2006). Island of Bali. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781406701746.
  4. Helen M. Creese (2016). Bali in the Early Nineteenth Century. BRILL Academic. pp. 305 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-31583-9.
  5. Jane Belo (1953), Bali: Temple Festival, Monograph 22, American Ethnological Society, University of Washington Press, pages 4–5
  6. Rost, Reinhold (2001-07-26). Miscellaneous Papers Relating to Indo-China and the Indian Archipelago. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415245548.
  7. Vickers, Adrian (1995), From Oey, Eric (Editor) (1995). Bali. Singapore: Periplus Editions. pp. 26–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-593-028-0.
  8. Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. p. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10518-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலித்_தீவில்_சாதியம்&oldid=3877915" இலிருந்து மீள்விக்கப்பட்டது