பாலபாரதி
Appearance
பாலபாரதி | |
---|---|
பிறப்பு | பாலபாரதி |
தேசியம் | இந்தியர் |
பணி | இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1983-நடப்பு |
பாலபாரதி (Balabharathi) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். 1983ஆம் ஆண்டு ஒருயுகம் திரைப்படத்தில் இசையமைப்பாளரானார். 1985இல் இவருக்கு சரவணன் என்பவரால் செல்வா அறிமுகமானார். பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்திரப் பாவை என்ற தொடரில் செல்வாவும் சரவணனும் பணியாற்றினர். சித்திரப் பாவை தொடரில் ஆறு பாடல்களுக்கு பாலபாரதி இசையமைத்தார். லீலா மாலா என்ற தொலைக்காட்சித் தொடருக்கும் இசையமைத்தார்.[1] [2]பின்னாளில் தலைவாசல் , அமராவதி ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3][4][5] இவர் திவனி என்ற இசை அகாதமியை நடத்தி வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பாலபாரதி மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை படிப்பு தத்துவ உளவியல், முதுகலை படிப்பு அரசறிவியல் மற்றும் பட்டயக் கணக்கறிஞர் போன்றவற்றைப் படித்தவர். இவர் பொதுவாக மிருதங்கம் வாசிப்பவர் ஆவார்.
இசையமைத்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் | |
---|---|---|---|---|
1992 | தலைவாசல் | செல்வா | அறிமுகம் | |
1993 | அமராவதி | செல்வா | ||
பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது | ||||
1994 | பொண்டாட்டியே தெய்வம் | என். கே. விசுவநாதன் | ||
1998 | கோல்மால் | செல்வா | ||
2001 | அசோகவனம் | தக்காளி சீனிவாசன் | ||
2006 | சாசனம் | மகேந்திரன் | ||
2006 | மெர்க்குரி பூக்கள் | ௭ஸ். ௭ஸ். ஸ்டான்லி | பின்னணி இசை மட்டும் | |
2012 | நாங்க | செல்வா | ||
2017 | ஊதாரி | வெளிவர இருக்கும் திரைப்படம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இளையரஜாவின் பாராட்டை பெற்றவன் நான்..! - இசையமைப்பாளர் பாலபாரதி" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
- ↑ "Ilayaraaja இல்லனா எந்த Music Director-ம் இல்லை" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
- ↑ "இசையமைப்பாளர் பாலபாரதி" இம் மூலத்தில் இருந்து 2017-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170205143410/http://spicyonion.com/tamil/musicdirector/bala-bharathi/.
- ↑ "Music Director Bala Bharathi". http://spicyonion.com/musicdirector/bala-bharathi-songs/.
- ↑ "பாலபாரதி பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2017-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170203214258/http://mio.to/show/Music+Director/Bala+Bharathi.