உள்ளடக்கத்துக்குச் செல்

பாரில் வனேய்சாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரில் வனேய்சாங்கி
சபாநாயகர்-மிசோரம் சட்டப் பேரவை
பதவியில்
8 மார்ச்சு 2024 – பதவியில்
முன்னையவர்லால்பியாக்ஜாமா
வார்ப்புரு:No break
பதவியில் உள்ளார்
பதவியில்
8 திசம்பர் 2023
முன்னையவர்எப். லால்னுன்மாவியா
தொகுதிஅய்சால் தெற்கு 3
மாநகர உறுப்பினர், அய்சால்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 பிப்ரவரி 2021
முன்னையவர்சி.லால்தன்சங்க
தொகுதிபகுதி 19
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாரில் வனேய்சாங்கி லவு

Expression error: Unrecognized punctuation character "{"., 28 February 1991 (28 February 1991-{{{month}}}-{{{day}}}) (அகவை Error: Need valid year, month, day)
அய்சால், மிசோரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஜோரம் மக்கள் இயக்கம்
முன்னாள் கல்லூரிவடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்
வேலைதொலைக்காட்சி தொகுப்பாளர், வானொலி அறிவிப்பாளர், அரசியல்வாதி

பாரில் வனேய்சாங்கி (Baryl Vanneihsangi) என்பவர் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் 9வது மிசோராம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் ஐஸ்வால் மாவட்டத்தின் ஐஸ்வால் தெற்கு 3 தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சோரம் மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர் ஐஸ்வால் மாநகராட்சியில் பகுதி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இளமை

[தொகு]

பாரில் 28 பிப்ரவரி 1991 அன்று ஐஸ்வாலில் உள்ள வான்ரோச்சுவாங்காவில் பிறந்தார்.[1][2][3] 2014ஆம் ஆண்டில், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், வானொலி தொகுப்பாளராகவும் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

[5][6] 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அய்சால் மாநகராட்சி தேர்தலில், சோரம் மக்கள் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி எண் XIX-இலிருந்து உறுப்பினராகத் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அய்சால் தெற்கு 3 சட்டப்பேரவைத் தொகுதியில் ஜோரம் மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மிசோரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2023ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிசோரம் சட்டமன்றத்தின் இளைய உறுப்பினராக இவர் அறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[7]

மார்ச்சு 7, 2024 அன்று 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மிசோரமின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பாரில் வனேய்சாங்கி பெற்றார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Mizoram Legislative Assembly". www.mizoramassembly.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
  2. "Aizawl South III Assembly Election Results 2023: ZPM's Baryl Vanneihsangi Tlau wins from Aizawl South III constituency". India Today NE (in ஆங்கிலம்). 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
  3. "Know About RJ-Turned-Politician Baryl Vanneihsangi, Who Became Youngest Woman MLA Of Mizoram". English Jagran (in ஆங்கிலம்). 2023-12-06. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
  4. "Meet Baryl Vanneihsangi, The Youngest MLA Of Mizoram". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
  5. "List of Elected Candidates – GE to AMC 2021". sec.mizoram.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
  6. "List of Councillors | Aizawl Municipal Corporation (AMC)". amcmizoram.com. பார்க்கப்பட்ட நாள் 2024-02-12.
  7. "Who is Baryl Vanneihsangi, the youngest woman MLA of Mizoram?". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-05. பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
  8. The Wire (8 March 2024). "History Made in Mizoram as a Woman MLA Occupies Speaker's Seat for First Time" இம் மூலத்தில் இருந்து 11 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240311091043/https://thewire.in/politics/history-made-in-mizoram-as-a-woman-mla-occupies-speakers-seat-for-first-time. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரில்_வனேய்சாங்கி&oldid=3907330" இலிருந்து மீள்விக்கப்பட்டது