உள்ளடக்கத்துக்குச் செல்

பாரத் மண்டபம்

ஆள்கூறுகள்: 28°37′10″N 77°14′33″E / 28.61944°N 77.24250°E / 28.61944; 77.24250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத் மண்டபம்
பாரத் மண்டபம் (IECC)
Map
பொதுவான தகவல்கள்
வகைகண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
நகரம்புது தில்லி
நாடு இந்தியா
ஆள்கூற்று28°37′10″N 77°14′33″E / 28.61944°N 77.24250°E / 28.61944; 77.24250
துவக்கம்26 சூலை 2023; 15 மாதங்கள் முன்னர் (2023-07-26)
கட்டுவித்தவர்இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு
உரிமையாளர்இந்திய அரசு
உயரம்12 மீட்டர்கள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலை நிறுவனம்அர்கோப் நிறுவனம்
ஐடாஸ் (சிங்கப்பூர்) [1]
முதன்மை ஒப்பந்தகாரர்என்பிசிசி (இந்தியா) நிறுவனம்
சப்பூர்ஜி பொல்லான்சி கம்பெனி
பிற தகவல்கள்
பொது போக்குவரத்து அணுகல்தில்லி மெட்ரோ, உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம்
வலைதளம்
www.indiatradefair.com

பாரத் மண்டபம் (Bharat Mandapam), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ளது. இந்திய அரசின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் 150 ஏக்கர் பரப்பளவில் ஓவல் வடிவில் நிறுவப்பட்ட பாரத் மண்டப வளாகம், பன்னாட்டு வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு வர்த்தக மாநாடுகள் நடத்துவதற்கு கட்டப்பட்டது. [2][3]ஐந்து நிரந்தர கண்காட்சி அரங்குகள் மற்றும் எந்த வகையான கண்காட்சிக்கும் ஏற்ற கட்டிடங்கள் உள்ளன. நேரு பெவிலியன், அணுசக்தி பெவிலியன் மற்றும் பாதுகாப்பு பெவிலியன் ஆகியவை இங்கு நிரந்தரமாக அமைந்துள்ள அரங்குகளில் அடங்கும்.

பாரத் மண்டப வளாகத்தில் 4.2 மில்லியன் சதுர அடி பரப்பில் உலகத் தாரம் வாய்ந்த மாநாட்டு மையத்தில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 1.5 இலட்சம் சதுர அடியில் 6 கண்காட்சி மண்டபங்கள், கீழ் தளங்களில் வாகனங்கள் நிறுத்தங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு 9-10 செப்டம்பர் 2023 நாட்களில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு நிகழ்ச்சி ஆகும்.[4]

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

இம் மண்டபம் ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தில்லி மெட்ரோ மூலம் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் இறங்கி, பாரத் மண்டபத்தை அடையலாம்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raj Rewal - Hall of Nations". Archived from the original on 11 June 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2013.
  2. "Bharat Mandapam: All About India's Largest Exhibition Hall in Pragati Maidan Hosting G20 Summit". News18 (in ஆங்கிலம்). 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  3. "PM Narendra Modi opens IECC complex at Pragati Maidan in Delhi, names it Bharat Mandapam: Key points". The Times of India. 2023-07-26. https://timesofindia.indiatimes.com/city/delhi/bharat-mandapam-narendra-modi-itpo-pragati-maidan-mice-tourism-conferences-india-economy/articleshow/102145641.cms?from=mdr. 
  4. Livemint (2023-09-07). "G20 Summit 2023 Delhi LIVE update: PM Modi finalises agreements with Joe Biden". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_மண்டபம்&oldid=4138963" இலிருந்து மீள்விக்கப்பட்டது