பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1970 |
தலைமையகம் | ஐதராபாத், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | ஏவுகணை உற்பத்தி |
இணையத்தளம் | www.bdl.ap.nic.in |
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited, BDL, இந்தி: भारत डायनामिक्स लिमिटेड ) இந்தியாவின் படைக்கலங்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். 1970ஆம் ஆண்டு ஆந்திரத் தலைநகர் ஐதராபாத்தில் நிறுவப்பட்டது. [1]
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.
தயாரிப்புகள்
[தொகு]இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட படைக்கலங்களை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புடன் இணைந்து இந்தியாவின் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. பாரத் டைனமிக்சில் தயாரான முதல் ஏவுகணை பிரித்திவி ஆகும். [2]
1998ஆம் ஆண்டில் பிடிஎல் தயாரித்த அக்னி ஏவுகணைகள் இந்தியப் படைத்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியப் படைத்துறைக்கு வேண்டிய பிற ஏவுகணைகளையும் அமைப்புகளையும் பிடிஎல் தயாரித்தளிக்கிறது. இவற்றில் பீரங்கிவண்டிகளுக்கு எதிரான கொங்கூர் ஏவுகணைகள் குறிப்பிடத்தக்கவை.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bharat Dynamics Limited". Bdl.ap.nic.in. Archived from the original on 2010-12-30. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ "Defence test-fires two Prithvi-2 missiles in quick succession". The Hindu Business Line. 2009-10-13. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ "Bharat Dynamics Limited". Bdl.ap.nic.in. Archived from the original on 2009-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.