பாய் சாகர் ஏரி
Appearance
பாய் சாகர் ஏரி Lake Foy Sagar | |
---|---|
காலைச் சூரிய ஒளியில் பாய் சாகர் ஏரி | |
அமைவிடம் | இராசத்தான், இந்தியா |
ஆள்கூறுகள் | 26°27′N 74°35′E / 26.450°N 74.583°E |
வகை | செயற்கை ஏரி |
பாய் சாகர் ஏரி (Lake Foy Sagar) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அஜ்மீர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கை ஆகும். இது 1892 ஆம் ஆண்டில் பஞ்சம் நீக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இது இத்திட்டப்பொறியியலாளரான திரு. ஃபாய் என்பவர் பெயரிலேயே பெயரிடப்பட்டது. பஞ்சத்தின் நீக்கத் திட்டத்தின்போது கடுமையான பஞ்சம் நிலவியது. ஏரி தட்டையானதாக தோன்றுகிறது. மேலும், அருகிலுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் காட்சிகளை வழங்குகிறது. இந்த ஏரி நகரத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
இந்த ஏரி கட்டப்பட்ட நேரத்தில், அஜ்மீர் நகரம் அஜ்மிரே என அழைக்கப்பட்டுள்ளது, இது ஏரிகளில் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து கவனிக்கப்பட்டது. அதன் கொள்ளளவு 15 மில்லியன் பருமன் அடிகள் ஆகும். இதன் நீர்ப்பரப்பு 14,000,000 சதுர அடிகள் (1,300,000 ச்.மீ) ஆகும்.