பாமலா தூபி
Appearance
பாமலா தூபி بهامالا اسٹوپ | |
---|---|
சிதிலமடைந்த பாமலா தூபி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஹரிபூர், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான் |
புவியியல் ஆள்கூறுகள் | 33°50′N 72°58′E / 33.833°N 72.967°E |
சமயம் | பௌத்தம் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கிபி 2-ஆம் நூற்றாண்டு |
பாமலா தூபி (Bhamala Stupa) (உருது: بهامالا اسٹوپ) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஹரிபூர் மாவட்டததின் நிர்வாகத் தலைமையிடமான ஹரிபூர் நகரத்தில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இத்தூபி கிபி இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[1][2] இத்தூபி தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இத்தூபி அருகே ஜௌலியன் விகாரை உள்ளது.
அகழாய்வுகள்
[தொகு]1929-இல் சர் ஜான் மார்சல் இவ்விடத்தில் அகழ்வாய்வு பணி மேற்கொண்டார். [2] பின்னர் 1930 மற்றும் 2017களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. [2]
-
சிறிய தூபிகள்
-
விகாரையின் அறைகள்
-
காந்தார சிற்பக் கலையில் தலைச்சிற்பம்