உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பநாயக்கன் பாளையம்

ஆள்கூறுகள்: 11°01′02″N 76°59′07″E / 11.017100°N 76.985300°E / 11.017100; 76.985300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பநாயக்கன் பாளையம்
Pappanaickenpalayam
P. N. Palayam
பி. என். பாளையம்
புறநகர்ப் பகுதி
பாப்பநாயக்கன் பாளையம் Pappanaickenpalayam P. N. Palayam is located in தமிழ் நாடு
பாப்பநாயக்கன் பாளையம் Pappanaickenpalayam P. N. Palayam
பாப்பநாயக்கன் பாளையம்
Pappanaickenpalayam
P. N. Palayam
பாப்பநாயக்கன்பாளையம் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°01′02″N 76°59′07″E / 11.017100°N 76.985300°E / 11.017100; 76.985300
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்
432 m (1,417 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
641037
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், கணபதி, சிங்காநல்லூர், பீளமேடு
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி

பாப்பநாயக்கன்பாளையம் (Pappanaickenpalayam or P. N. Palayam) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] இப்பகுதிக்கு புதூர் மற்றும் பழையூர் என்று இரண்டு இடங்கள் உள்ளன.[2] 1710 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பழைய பாப்பநாயக்கன் பாளையம் சிதைந்து போனது. தற்போதைய பாப்பநாயக்கன் பாளையம், 1711 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தியதி, பெரியபாப்பா நாயுடு என்பவரால் உருவாக்கப்பட்டது.[3] 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லட்சுமி ஆலைகள் என்ற துணி நூற்பாலை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் துணி நூற்பாலைத் தொகுதி ஒன்று பாப்பநாயக்கன் பாளையத்தில் அமைந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.[4] இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜி. குப்புசாமி நாயுடு, பாப்பநாயக்கன் பாளையத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 432 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாப்பநாயக்கன் பாளையம் ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'01.6"N 76°59'07.1"E (அதாவது, 11.017100°N 76.985300°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

[தொகு]

கோயம்புத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், ஆவாரம்பாளையம், சிங்காநல்லூர், கணபதி, பீளமேடு ஆகியவை பாப்பநாயக்கன்பாளையத்துக்கு அருகிலுள்ள ஊர்களாகும்.

போக்குவரத்து

[தொகு]

சாலைப் போக்குவரத்து

[தொகு]

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை பாப்பநாயக்கன் பாளையம் வழியாகச் செல்கின்றன.

தொடருந்து போக்குவரத்து

[தொகு]

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் மற்றும் பீளமேடு தொடருந்து நிலையம் ஆகியவை பாப்பநாயக்கன் பாளையத்திலிருந்து ஒவ்வொன்றும் முறையே சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

[தொகு]

இங்கிருந்து, கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

கல்வி

[தொகு]

பள்ளி

[தொகு]

பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் 'கோயம்புத்தூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி' ஒன்று உள்ளது. இந்திய விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கல்வி நிலையங்களில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சிகள் மற்றும் தனிச்செயல் திறன்கள் வெளிப்படுத்துதலில், இப்பள்ளியில் ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை படிக்கும் அறுபது மாணவர்களின் சுமார் நாற்பது அறிவியல் செயல்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.[5]

கல்லூரி

[தொகு]

பல்தொழில்நுட்பக் கல்லூரி

[தொகு]

அரசினர் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று இவ்வூருக்கு அருகில் உள்ளதால், மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

மருத்துவம்

[தொகு]

கோ. குப்புசாமி நாயுடு நினைவு (ஜி. கே. என். எம்.) மருத்துவமனை என்ற புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை பாப்பநாயக்கன் பாளையத்தில் சேவை புரிந்து வருகிறது. இம்மருத்துவமனையில், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கங்களும், மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் பெண்களுக்கு இலவசமாகவும் நடைபெற்றன.[6]

ஆன்மீகம்

[தொகு]

கோயில்கள்

[தொகு]

இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு கட்டுப்பாட்டில் உள்ள வெங்கடேசப் பெருமாள் என்ற சீனிவாசப் பெருமாள் கோயில் ஒன்று பாப்பநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ளது.[7] இவ்வூரில் பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள் கோயில் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ சப்பாணி மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் பிரசித்தி பெற்றவையாகும். மேலும், இங்குள்ள பழையூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. அவ்விதமே, 2022 ஆம் ஆண்டு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Assembly, Tamil Nadu (India) Legislature Legislative (1984). Tamil Nadu Legislative Assembly debates; official report. Legislative Assembly.
  2. சிவமதி, எடையூர் (2006). சுராவின் அருள் தரும் ஆலயங்கள். Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-789-7.
  3. "கோட்டைமேடு உருவான வரலாறு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  4. "Home - Lakshmi Mills" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  5. "அறிவியல் கண்காட்சி :மாணவர்கள் அசத்தல் - Dinamalar Tamil News" (in ta). 2022-10-19. https://m.dinamalar.com/detail.php?id=3149210. 
  6. "ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் சார்பில் - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  7. "Arulmigu Venkatesaperumal (Alias) Srinivasaperumal Temple, Pnpalayam, Pnpalayam - 641037, Coimbatore District [TM009776].,Sri Srinivasa Perumal Temple,Sri Srinivasa Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  8. தினத்தந்தி (2022-07-22). "அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை" (in ta). https://www.dailythanthi.com/News/State/special-pooja-in-amman-temples-751524. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பநாயக்கன்_பாளையம்&oldid=3631736" இலிருந்து மீள்விக்கப்பட்டது