உள்ளடக்கத்துக்குச் செல்

பாபு மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு மோகன்
2022 இல் பாபு மோகன்
ஆந்திரப் பிரதேச அரசில் தொழிலாளர் துறை அமைச்சர்
பதவியில்
2002–2004
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1998–2004
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
முன்னையவர்மல்யாலா ராஜய்யா
பின்னவர்தாமோதர் ராஜா நரசிம்மா
தொகுதிஆந்தோல்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2014–2018
முதலமைச்சர்க. சந்திரசேகர் ராவ்
முன்னையவர்தாமோதர் ராஜ நரசிம்மா
பின்னவர்கிராந்தி கிஷன் சாண்டி
தொகுதிஆந்தோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-04-14)14 ஏப்ரல் 1952
பீரோலு
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2018 - present)
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி
(1990's - 2014)
பாரத் இராட்டிர சமிதி
(2014 - 2018)
துணைவர்இந்திரா விஜயலட்சுமி
பெற்றோர்பள்ளி ஆனந்த ராவ் & பிரேமாம்மா
வேலைநடிகர், அரசியல்வாதி

பாபு மோகன் (Babu Mohan)[1] என அழைக்கப்படும் பள்ளி பாபு மோகன் ஓர் இந்திய நடிகரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பணியாற்றுகிறார்.. மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சருமாவார்.[2] மாமகாரு என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருதை வென்றார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பாபு மோகன், இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள கம்மம் மாவட்டத்திலுள்ள பீரோலு என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆசிரியர். பாபு மோகன் ஆந்திர மாநில வருவாய் துறையில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். பின்னர் திரைப்படங்களில் ஆர்வத்தைத் தொடர இந்த வேலையை விட்டுவிட்டார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

பாபு மோகன், ஈ பிரச்ச்னக்கு பதிலேதி படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அஹுதி ( கோடி ராமகிருஷ்ணா இயக்கம்), அங்குசம் மற்றும் மாமகாருவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு, பாபு மோகன் மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகிய இருவரும் நகைச்சுவைக் கூட்டணியை உருவாக்கி, மிகவும் பிரபலமான இரட்டையர்களாக இருந்தனர்.[4] இவர்களுக்காக பல தயாரிப்பாளர்கள் சிறப்புக் கதாபாத்திரங்களை உருவாக்கினர். இந்த ஜோடி மாயலோடு, ராஜேந்திருடு கஜேந்திருடு மற்றும் பிற படங்களில் நடித்தது. அவற்றில் பெரும்பாலானவை ச. வெ. கிருட்டிணா ரெட்டி இயக்கியது.

பிரம்மானந்தத்துடன் இணைந்து பாபு மோகன் பல படங்களில் நடித்துள்ளார். ஹலோ பிரதர், வரசுடு, அல்லரி அல்லுடு, இன்ஸ்பெக்டர் அஷ்வினி, பெத்தராயுடு, பரதேசி, அப்புலா அப்பா ராவ் மற்றும் ஜம்ப லகிடி பம்பா ஆகியவை இவர்களது படங்களில் அடங்கும்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பாபு மோகன், என்.டி.ராமராவின் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தார். இது இவரை தெலுங்கு தேசம் கட்சியில் சேர வழிவகுத்தது. 1999 இடைத்தேர்தலில் முதன்முதலில் மேடக் மாவட்டத்திலுள்ள ஆந்தோல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக பணியாற்றினார். [5][6]. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், முந்தைய துணை முதல்வராக இருந்த தாமோதர ராஜா நரசிம்மாவிடம் தோல்வியடைந்தார். 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி பாரத் இராட்டிர சமிதியில் இணைந்தார்.

இவர் பாரத இராட்டிர சமிதியில் சேர்ந்த பின்னர், நடைபெற்ற 2014 பொதுத் தேர்தலில் தாமோதர் ராஜா நரசிம்மாவை எதிர்த்து அதே தொகுதியில் மீண்டும் சட்டமன்ற உருப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [7] அக்டோபர் 28, 2023 அன்று, இவர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவமதிப்பு மற்றும் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, குறிப்பாக கிஷன் ரெட்டி மற்றும் பாண்டி சஞ்சய் போன்ற தனிநபர்கள் இந்த முடிவிற்கு காரணமாகக் குரிப்பிட்டார். [8]

சொந்த வாழ்க்கை

[தொகு]

மோகன், இந்திரா விஜயலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களது மூத்த மகன் பாலி பவன் குமார் 12 அக்டோபர் 2003 அன்று சாலை விபத்தில் இறந்தார் [9] [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Byra, Mahalaxmi (2020-06-17). "Babumohanpally | MLA | Andole | Medak | Telangana | BJP". the Leaders Page (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.
  2. "Actor-politician Babu Mohan joins BJP". Business Standard India. 2018-09-29. https://www.business-standard.com/article/news-ians/actor-politician-babu-mohan-joins-bjp-118092900709_1.html. 
  3. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Andhra Pradesh,Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in Telugu language)
  4. "Comedy Stars to celebrate Kota Srinivasa Rao and Babu Mohan's friendship; watch promo". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.
  5. "Babu Mohan ready for real-life 'role'". The Times of India (in ஆங்கிலம்). September 13, 2002. பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.
  6. "Surprise visits: CM 'warns' Babu Mohan | Hyderabad News". The Times of India (in ஆங்கிலம்). September 25, 2002. பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.
  7. "Denied TRS ticket, actor-politician Babu Mohan joins BJP in Telangana" (in ஆங்கிலம்). 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.
  8. "Babu Mohan: పార్టీలో అవమానాలు జరిగాయి.. ఎన్నికల్లో పోటీ చేయను: బాబూమోహన్‌" (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  9. "Babu Mohan's son dies in accident" இம் மூலத்தில் இருந்து 2013-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130806114727/http://articles.timesofindia.indiatimes.com/2003-10-13/hyderabad/27187823_1_road-accident-eldest-son-p-babu-mohan. 
  10. "Babu Mohan shocking comments on Sai Dharam tej." (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_மோகன்&oldid=4108951" இலிருந்து மீள்விக்கப்பட்டது