பாபு பயணிகள் இரயில்
Appearance
பாபு பயணிகள் இரயில் Babu Passenger | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | நகரங்களிடை இரயில் |
முதல் சேவை | 1983 |
நடத்துனர்(கள்) | பாக்கித்தான் இரயில்வே |
வழி | |
தொடக்கம் | லாகூர் சந்திப்பு |
முடிவு | வாசிராபாத் சந்திப்பு |
ஓடும் தூரம் | 103 கிலோமீட்டர் |
சராசரி பயண நேரம் | 2 மணி, 5 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினசரி |
தொடருந்தின் இலக்கம் | 205UP (லாகூர்→வாசிராபாத்) 206DN (வாசிராபாத்→லாகூர்) |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | சிக்கனம் |
உணவு வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை உரிமையாளர் | பாக்கித்தான் இரயில்வே |
பாபு பயணிகள் இரயில் (Babu Passenger) லாகூருக்கும் வாசிராபாத்துக்கும்[1] இடையில் செல்லும் பயணிகள் இரயில் ஆகும். பாக்கித்தான் இரயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் இரயிலை இயக்குகிறது. இரு நகரங்களுக்கிடையிலான 103 கிலோமீட்டர் (64 மைல்) தொலைவை இந்த இரயில் தோராயமாக 2 மணி 5 நிமிடங்களில் கடக்கிறது. பாக்கித்தானின் பிரதானமான இரயில் வழித்தடங்களில் ஒன்றான கராச்சி-பெசாவர் இரயில் பாதையின் நீட்சிப் பாதையில் பாபு பயணிகள் இரயில் பயணம் செய்கிறது.
பாதை
[தொகு]கராச்சி-பெசாவர் இரயில் பாதையில் லாகூர்-வாசிராபாத் நகரங்களுக்கு இடையில் உள்ள பாதை.
நிறுத்தங்கள்
[தொகு]- லாகூர் சந்திப்பு
- பதாமி பாக்
- சாக்தாரா பாக்
- கலா சா காக்கு
- முரித்கே
- சாதோக்
- காமோக்கு
- எமினாபாத்
- குச்ரன்வாலா சிட்டி
- குச்ரன்வாலா
- குச்ரன்வாலா கண்டோன்மெண்ட்
- காக்கார் மண்டி
- தாவுங்கால்
- வாசிராபாத் சந்திப்பு [2].
வசதிகள்
[தொகு]படுக்கை வசதிகளுடன் சிக்கனக் கட்டணச் சேவையாக இப்பயணிகள் இரயில் இயக்கப்படுகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IRFCA: Pakistan Railway Train Names Author: Owais Mughal, Retrieved on 1 July 2013
- ↑ Pakistan Railways official website, Babu Passenger Timings, Retrieved on 23 October 2012
- ↑ http://epaper.dawn.com/DetailImage.php?StoryImage=31_05_2017_177_004