பாத்ஷாஹி நினைவு மண்டபம்
பாத்ஷாஹி நினைவு மண்டபம் | |
---|---|
உள்ளூர் பெயர் அஷூர்கானா | |
அமைவிடம் | ஐதராபாத்து, இந்தியா |
கட்டப்பட்டது | 1594 |
பாத்ஷாஹி நினைவு மண்டபம் ( Badshahi Ashurkhana ) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும். இது இமாம் உசேனின் தியாகத்தின் நினைவாக கட்டப்பட்டது. இது முஃகர்ரமின் துக்க காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. [1]
அஷுர்கானா, இமாம்பர்கா அல்லது இமாம்பரா என்றும் அழைக்கப்படும் இது சியா முஸ்லிம்களின் நினைவு விழாக்களுக்கான ஒரு சபை மண்டபமாகும். குறிப்பாக முஃகர்ரம் துக்கத்துடன் தொடர்புடையது.[2] இதன் பெயர் முகம்மது நபியின் பேரனான உசேன் இப்னு அலி என்பவரிடமிருந்து பெறப்பட்டது.[3]
இது இப்போது ஒரு பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூதாதையரின் பரம்பரை முத்தவல்லி முஜாவர் மிர் நவாஜிஷ் அலி மூஸ்வி 11 தலைமுறை பாதுகாவலராக இருக்கிறார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
வரலாறு[தொகு]
இது சார்மினார் கட்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1594இல் முஹம்மது குலி குதுப் ஷா அவர்களால் கட்டப்பட்டது. 1611ஆம் ஆண்டில் அப்துல்லா குதுப் ஷாவின் கீழ் அற்புதமான வண்ண ஓடு-மொசைக் அலங்காரம் முடிக்கப்பட்டது. அதேசமயம், 1764ஆம் ஆண்டில் இரண்டாம் நிசாம் அலி கான் என்பவரால் மரக் கொலோனேடுகள், வெளிப்புற அரங்குகள், நுழைவு வாயில்கள் ஆகியன சேர்க்கப்பட்டன. [4]
நினைவுச்சின்னம்[தொகு]
இங்கு நியாஸ் கானா (பிரசாதம் வழங்கும் இடம்), நகார் கானா (முரசு இசைக்குமிடம்), சராய் கானா ( பக்தர்கள் ஓய்வெடுக்குமிடம் ) அப்தார் கானா (குடிநீர் வழம்க்குமிடம்), லங்கர் கானா (உணவு பரிமாறும் இடம்), மாகன்-இ-முஜாவர் ( முஜாவர் குடியிருப்பு), தப்தார்-இ-முஜாவர் (முஜாவர் அலுவலகம்), அலவா சபுத்ரா, காவலர் அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பளபளப்பான மற்றும் துடிப்பான வண்ணங்களைத் தக்கவைத்துள்ள பற்சிப்பி ஓடுகளுடன் இன்றும் நிற்கிறது. அறுகோணங்களில் உள்ள சிக்கலான வடிவமைப்பு நேர்த்தியானக் காணப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad. 1992.
- ↑ Juan Eduardo Campo (1 January 2009). Encyclopedia of Islam. Infobase Publishing. pp. 318–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-2696-8.
- ↑ Marafi, Najebah (29 September 2012). The Intertwined Conflict: The Difference Between Culture and Religion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1477128367.
- ↑ "Heritage Walk in Hyderabad – Badshahi Ashurkhana".