உள்ளடக்கத்துக்குச் செல்

பாதரசம் தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச தெலூரைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பாதரச தெலூரைடு
வேறு பெயர்கள்
பாதரச தெலூரைடு, பாதரசம்(II) தெலூரைடு
இனங்காட்டிகள்
12068-90-5 Y
EC number 235-108-9
InChI
  • InChI=1S/Hg.Te
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82914
  • [Te]=[Hg]
பண்புகள்
HgTe
வாய்ப்பாட்டு எடை 328.19 கி/மோல்
தோற்றம் கருப்பு நிற கனசதுரப் படிகங்கள்
அடர்த்தி 8.1 கி/செ.மீ3
உருகுநிலை 670°செல்சியசு
கட்டமைப்பு
படிக அமைப்பு சுபேலரைட்டு, cF8
புறவெளித் தொகுதி F43m, No. 216
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

பாதரசம் தெலூரைடு (Mercury telluride) என்பது HgTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் தெலூரியம் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் குறைக்கடத்திப் பொருட்களின் II-VI குழுவுடன் தொடர்புடைய ஓர் அரை உலோகமாகக் கருதப்படுகிறது. மெர்க்குரிக் தெலூரைடு, மெர்க்குரி(II) தெலூரைடு, பாதரச(II) தெலூரைடு என்ற வேறு பெயர்களாலும் பாதரச தெலூரைடு அடையாளப்படுத்தப்படுகிறது.

HgTe இயற்கையில் கொலராடோயிட்டு என்ற கனிம வடிவமாக தோன்றுகிறது.

பண்புகள்

[தொகு]

வேறுவிதமாகக் கூறப்படாவிட்டால் அனைத்து பண்புகளும் நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இருக்கும். அணிக்கோவை அளவுரு கனசதுர படிக வடிவத்தில் சுமார் 0.646 நானோமீட்டர் ஆகும். பரும குணகம் சுமார் 42.1 கிகா பாசுக்கல், வெப்ப விரிவாக்க குணகம் சுமார் 5.2×10−6/கெல்வின், நிலையான மின்கடத்தா மாறிலி 20.8, மாறும் மின்கடத்தா மாறிலி மதிப்பு 15.1, வெப்ப கடத்துத்திறன் குறைவாக 2.7 வாட்டு·மீ2/(மீ·கெல்வின்) என்ற இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது. HgTe பிணைப்புகள் பலவீனமானவை என்பதால் குறைந்த கடினத்தன்மை மதிப்பு 2.7×107 கிலோ/மீ2. அளவில் உள்ளது.[1][2][3]

மாசிடல்

[தொகு]

என்-வகை மாசு உடைய சேர்மத்தை போரான், அலுமினியம், காலியம் அல்லது இண்டியம் போன்ற தனிமங்களைக் கொண்டு அடையலாம். அயோடினும் இரும்பும் கூட என்-வகை கலப்பு சேர்மத்தை உருவாக்கும். பாதரசக் காலியிடங்கள் காரணமாக HgTe இயற்கையாகவே பி-வகை மாசுச் சேர்மமாகும். பி-வகை மாசு சேர்மத்தை துத்தநாகம், தாமிரம், வெள்ளி அல்லது தங்கத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமும் அடையலாம். [1][2]

இடத்தியல் மின்காப்பி

[தொகு]
ஒரு கார்பன் நானோகுழாயில் பதிக்கப்பட்ட HgTe நானோகம்பி எலக்ட்ரான் நுண் ஒளிப்படம் (வலது), பட உருவகப்படுத்துதலுடன் (இடது) இணைக்கப்பட்டுள்ளது.[4]

பாதரசம் தெலூரைடு 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடத்தியல் மின்காப்பியாகும். இடத்தியல் மின்காப்பிகள் மொத்தமாக மின்சாரத்தை ஆதரிக்க முடியாது, ஆனால் மேற்பரப்பில் வரையறுக்கப்பட்ட மின்னணு நிலைகள் மின்சுமை கடத்திகளாகச் செயல்படும்..[5]

வேதியியல்

[தொகு]

HgTe பிணைப்புகள் பலவீனமாக உள்ளன. இவற்றின் உருவாதல் என்தால்பி −32கிலோயூல்/மோல் ஆகும். இது தொடர்புடைய சேர்மமான காட்மியம் தெலூரைடுக்கான மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது. ஐதரோபுரோமிக் அமிலம் போன்ற அமிலங்களால் HgTe எளிதில் அரிக்கும்.[1][2]

வளர்ச்சி

[தொகு]

பாதரசம் மற்றும் தெலூரியம் அதிக பாதரச நீராவி அழுத்தத்தின் முன்னிலையில் அதிக அளவிலான வளர்ச்சி ஏற்படுகிறது. HgTe சேர்மத்தை புறவளர்ச்சியாகவும் வளர்க்கலாம். உலோகக்கரிம ஆவி-கட்டப் புறவளர்ச்சி முறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[1][2]

பாதரச தெலூரைடின் நானோ துகள்கள் காட்மியம் தெலூரைடு நானோதட்டணுக்களிலிருந்து நேர்மின் அயனிப் பரிமாற்றம் மூலம் பெறலாம்.[6]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Brice, J. and Capper, P. (eds.) (1987) Properties of mercury cadmium telluride, EMIS datareview, INSPEC, IEE, London, UK.
  2. 2.0 2.1 2.2 2.3 Capper, P. (ed.) (1994) Properties of Narrow-Gap Cadmium-Based Compounds. INSPEC, IEE, London, UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85296-880-9
  3. Boctor, N.Z.; Kullerud, G. (1986). "Mercury selenide stoichiometry and phase relations in the mercury-selenium system". Journal of Solid State Chemistry 62 (2): 177. doi:10.1016/0022-4596(86)90229-X. Bibcode: 1986JSSCh..62..177B. 
  4. Spencer, Joseph; Nesbitt, John; Trewhitt, Harrison; Kashtiban, Reza; Bell, Gavin; Ivanov, Victor; Faulques, Eric; Smith, David (2014). "Raman Spectroscopy of Optical Transitions and Vibrational Energies of ~1 nm HgTe Extreme Nanowires within Single Walled Carbon Nanotubes". ACS Nano 8 (9): 9044–52. doi:10.1021/nn5023632. பப்மெட்:25163005. https://eprints.soton.ac.uk/401309/1/HgTe%2540SWNT_ACSNano_Final.pdf. 
  5. König, M; Wiedmann, S; Brüne, C; Roth, A; Buhmann, H; Molenkamp, L. W.; Qi, X. L.; Zhang, S. C. (2007). "Quantum Spin Hall Insulator State in HgTe Quantum Wells". Science 318 (5851): 766–770. doi:10.1126/science.1148047. பப்மெட்:17885096. Bibcode: 2007Sci...318..766K. 
  6. Izquierdo, Eva; Robin, Adrien; Keuleyan, Sean; Lequeux, Nicolas; Lhuillier, Emmanuel; Ithurria, Sandrine (2016-08-12). "Strongly Confined HgTe 2D Nanoplatelets as Narrow Near-Infrared Emitters". Journal of the American Chemical Society 138 (33): 10496–10501. doi:10.1021/jacs.6b04429. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:27487074. https://pubs.acs.org/doi/full/10.1021/jacs.6b04429. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரசம்_தெலூரைடு&oldid=4153806" இலிருந்து மீள்விக்கப்பட்டது