பாசெரினி வினை
பாசெரினி வினை Passerini reaction | |
---|---|
பெயர் மூலம் | மாரியோ பாசெரினி |
வினையின் வகை | கரிம-கரிமப் பிணைப்பு உருவாகும் வினை |
பாசெரினி வினை (Passerini reaction) என்பது ஓர் ஐசோசயனைடு, ஓர் ஆல்டிகைடு அல்லது கீட்டோன், ஒரு கார்பாக்சிலிக் அமிலம் மூன்றும் வினைபுரிந்து α-அசைலாக்சி அமைடு உருவாகும் வேதி வினையைக் குறிப்பதாகும் [1][2][3]
.
1921 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த புளோரன்சு நகரில் மேரியோ பாசெரினி இக்கரிம வேதியியல் வினையைக் கண்டறிந்தார். ஐசோசயனைடு அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதலாவது பல் கூறு வினையும் இதுவேயாகும். தற்போது சேர்வியல் வேதியியலின் மையமாக இவ்வேதி வினை முக்கியப் பங்கு வகிக்கிறது [4]
சமீபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வேதியிலர்கள் மற்றும் பலர் சமச்சீரற்ற பாசெரினி வினைக்கான எதிர்த்தெரிவுநிலை வினையூக்கியை உருவாக்கியுள்ளனர்..[5].
வினையின் வினைவழிமுறை
[தொகு]பாசெரினி வினைக்கு இரண்டு விதமான வினைப்பாதைகள் கருதுகோளாக்கப்படுகின்றன.
அயனி வழிமுறை
[தொகு]மெத்தனால் மற்றும் தண்ணீர் போன்ற முனைவுக் கரைப்பான்களில் இவ்வினை கார்பனைலின் புரோட்டானேற்றமும் அதைத் தொடர்ந்து ஐசோசயனைடின் அணுக்கருநாட்ட சேர்க்கை வினையும் நிகழ்ந்து நைட்ரிலியம் அயனி 3 உருவாகிறது. கார்பாக்சிலேட்டு இதனுடன் சேர்ந்து இடைநிலை விளைபொருள் 4 மற்றும் அதைத் தொடர்ந்து எசுத்தரும் 5 உருவாகின்றன.
ஒருமித்த வினைவழிமுறை
[தொகு]முனைவற்ற கரைப்பான்களின் உயர் அடர்த்தியில் இவ்வினைக்கான கருத்தொருமித்த வினைவழிமுறை முன்வைக்கப்படுகிறது [6]
இந்த வினைவழிமுறையில் ஐசோசையனைடு (R-NC), கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் கார்பனைல் ஆகிய மூன்றும் அணுக்கருநாட்ட சேர்க்கை வினையின் வரிசை முறையில் நிகழும் ஒரு மும்மூலக்கூற்று வினையாகும். நிலைமாறும் கட்டத்தில் பகுதி சகப்பிணைப்பு அல்லது இரட்டைப் பிணைப்புடன் ஓர் ஐந்து உறுப்பு வளையம் உருவாகும் என சித்தரிக்கப்படுகிறது. பாசெரினி வினையின் இரண்டாவது படிநிலையில் அருகிலுள்ள ஐதராக்சில் குழுவில் ஓர் அசைல் மாற்றம் நிகழ்கிறது. இவ்வினை வழிமுறைக்கான ஆதரவும் அறியப்படுகிறது. வினை முனைவற்ற கரைப்பான்களின் வழியாக நடைபெறுகிறது. வினை இயக்கமும் மூன்று வினைபடு பொருள்களையும் சார்ந்துள்ளது. ஒருங்குதொடர் தொகுப்புமுறைக்கு இவ்வினை நல்லதொரு உதாரணமாகும்.
வரம்பு
[தொகு]பல்வேறு பல்கூறு வினைகளில் பாசெரினி வினை பயன்படுத்தப்படுகிறது. ஆர்னர்-வேத்சுவொர்த்-எம்மான்சு வினையில் டெப்சிபெப்டைடு உருவாக்கும் வினை இதற்கு ஓர் உதாரணமாகும் :[7]
.
புதுப்பிக்கத்தக்க பொருள்களில் இருந்து பலபடிகள் தயாரிப்பதில் பாசெரினி பல்கூறு வினை பயன்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Passerini, M.; Simone, L. Gazz. Chim. Ital. 1921, 51, 126–29.
- ↑ Passerini, M.; Ragni, G. Gazz. Chim. Ital. 1931, 61, 964–69.
- ↑ Banfi, L.; Riva, R. (2005). The Passerini Reaction. Vol. 65. pp. 1–140. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471264180.or065.01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471264187.
{{cite book}}
:|journal=
ignored (help). - ↑ Dömling, A.; Ugi, I. Angew. Chem. Int. Ed. Engl. 2000, 39, 3168–3210. (Review)
- ↑ Denmark, S. E.; Fan, Y. J. Org. Chem. 2005, 70, 9667–76. எஆசு:10.1021/jo050549m
- ↑ The Passirini Reaction L. Banfi, R.Riva in Organic Reactions vol. 65 L.E. Overman Ed. Wiley 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-68260-8
- ↑ A Flexible Six-Component Reaction To Access Constrained Depsipeptides Based on a Dihydropyridinone Core Monica Paravidino, Rachel Scheffelaar, Rob F. Schmitz, Frans J. J. de Kanter, Marinus B. Groen, Eelco Ruijter, and Romano V. A. Orru J. Org. Chem. 2007, 72, 10239–42 எஆசு:10.1021/jo701978v
- ↑ Kreye, O.; Tóth, T.; Meier, M. J. Am. Chem. Soc., 2011, 133 (6), pp 1790–1792 [1] எஆசு:10.1021/ja1113003