உள்ளடக்கத்துக்குச் செல்

பாசியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசியியல் என்பது கடற்பாசி மற்றும்அல்காக்கள் பற்றிய அறிவியல் ஆய்வுத் துறையாகும். இது உயிர் அறிவியல் துறையின் கீழ் உள்ள தாவரவியல் பிரிவைச் சார்ந்ததாகும். நீர்வாழ் சூழ்நிலை மண்டலங்களில் பாசிகள் முதன்மை உற்பத்தியாளர்களாக இருப்பவையாகும். பெரும்பாலான ஆல்காக்கள் ஈரமான சூழலில் வாழும் மெய்க்கருவுயிரி, ஒளிச்சேர்க்கை தாவர உயிரினங்களாகும்.இதன் உடல் வேர், தண்டு, இலை என்று உயர் தாவரங்களைப்போல் வேறுபடுத்தி அறியமுடியாத ஒற்றை செல் மற்றும் நுண்தாவரஅமைப்பை கொண்டதாகும். இவை பூவாத்தாவர வகையைச் சார்ந்தது.

வரலாறு

[தொகு]

பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் இருவரும் ஆல்காக்களைப் பற்றி அறிந்திருந்தாலும், பண்டைய சீனர்கள்[1] சில வகை பாசிகளை உணவாக பயிரிட்டுள்ளனர், ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் ஆய்வு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1757 ஆம் ஆண்டில் பெஹர் ஆஸ்பெக் என்பவரால் ஃபுகஸ் மாக்சிமஸ் (இப்போது எக்லோனியா மாக்சிமா) விளக்கம் மற்றும் பெயரிடலுடன் தொடங்கி டாசன் டர்னர் மற்றும் கார்ல் அடால்ஃப் அகர்த் போன்ற அறிஞர்களின் விளக்கப் பணிகளின் வழியே தொடர்ந்தது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஜே.வி.லாமௌரக்ஸ் மற்றும் வில்லியம் ஹென்றி ஹார்வி ஆகியோரால் ஆல்காக்களுக்குள் குறிப்பிடத்தக்க குழுக்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆல்காக்களை அவற்றின் நிறமியின் அடிப்படையில் நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரித்ததற்காக ஹார்வி "நவீன உயிரியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.[2]

கடற்பாசிகளின் பன்முகத்தன்மையைக் கொண்ட கண்டம் ஆஸ்திரேலியா ஆகும், இங்கு 2,000க்கும் மேற்பட்ட பாசி இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Porterfield, William M. (1922) "References to the algae in the Chinese classics" Bulletin of the Torrey Botanical Club 49: pp. 297–300
  2. "About Phycology" Lance Armstrong Foundation
  3. "Marine algae". Royal Botanic Gardens & Domain Trust. Archived from the original on 6 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 September 2014.

வெளிஇணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசியியல்&oldid=3872927" இலிருந்து மீள்விக்கப்பட்டது