உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022
இலங்கை
பாக்கித்தான்
காலம் 16 – 28 சூலை 2022
தலைவர்கள் திமுத் கருணாரத்ன பாபர் அசாம்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் தினேஸ் சந்திமல் (271) பாபர் அசாம் (271)
அதிக வீழ்த்தல்கள் பிரபாத் ஜெயசூரிய (17) முகமது நவாஸ் (10)
தொடர் நாயகன் பிரபாத் ஜெயசூரிய (இல)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2022 சூலையில் இரண்டு தேர்வுப் போட்டிகளில் இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் விளையாடியது.[1] இத்தேர்வுத் தொடர் 2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக விளையாடப்பட்டது.[2][3] 2022 ஏப்பிரலில், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் இத்தொடர் நடத்தப்படுவதை உறுதி செய்தது.[4][5] தொடக்கத்தில், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடத் தீர்மானிக்கப்பட்டிருந்தது,[6] ஆனால் இந்த ஒருநாள் போட்டிகள் 2020–2023 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சூப்பர் லீகின் ஒரு பகுதியாக இல்லாதிருந்ததால்,[7] இப்போட்டிகளை நடத்துவதில்லை என 2022 மே மாதத்தில் தீர்மானிக்கப்பட்டது.[8] 2022 சூன் மாதத்தில் தேர்வுப் போட்டிகளுக்கான அரங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[9] பாக்கித்தான் கடைசியாக 2015 சூன் சூலை மாதங்களில் இலங்கையில் தேர்வுப் போட்டிகளில் விளையாடியிருந்தது.[10] இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 சூலை 17 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் இரண்டாவது தேர்வுப் போட்டியை கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கத்தில் இருந்து காலி பன்னாட்டு அரங்கத்திற்கு மாற்றியது.[11]

முதலாவது தேர்வுப் போட்டியில் 342 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாக்கித்தான் அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12] இது தேர்வுப் போட்டிகளில் பாக்கித்தானின் இரண்டாவது அதிகூடிய வெற்றிகரமான ஓட்ட இலக்காகும்.[13] இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது, தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்.[14] தேர்வுத் தொடரின் வீரரான பிரபாத் ஜெயசூரிய ஆறு இன்னிங்சுகளில் தனது நான்காவது ஐந்து இலக்குகளை எடுத்தார்.[15]

அணிகள்

[தொகு]
தேர்வுகள்
 இலங்கை[16]  பாக்கித்தான்[17]

முதலாவது போட்டியில் காயமடைந்த இலங்கை அணியின் மகீசு தீக்சனாவுக்காக லக்சித்த மனசிங்க இரண்டாவது போட்டியில் விளையாடினார்.[18] முதல் போட்டியில் காயமடைந்த பாக்கித்தான் அணியின் சகீன் அஃப்ரிடி இரண்டாம் போட்டியில் விளையாடவில்லை.[19]

தேர்வுத் தொடர்கள்

[தொகு]

1-வது தேர்வு

[தொகு]
16–20 சூலை 2022
ஓட்டவிபரம்
222 (66.1 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 76 (115)
சகீன் அஃப்ரிடி 4/58 (14.1 நிறைவுகள்)
218 (90.5 நிறைவுகள்)
பாபர் அசாம் 119 (244)
பிரபாத் ஜெயசூரிய 5/82 (39 நிறைவுகள்)
337 (100 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 94* (139)
முகமது நவாஸ் 5/88 (28 நிறைவுகள்)
344/6 (127.2 நிறைவுகள்)
அப்துல்லா சஃபீக் 160* (408)
பிரபாத் ஜெயசூரிய 4/135 (56.2 நிறைவுகள்)
பாக்கித்தான் 4 இலக்குகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ)
ஆட்ட நாயகன்: அப்துல்லா சஃபீக் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அகா சல்மான் (பாக்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • பாபர் அசாம் தனது 228 இன்னிங்சுகளில், பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில், 10,000 ஓட்டங்களை மிக வேகமாக எடுத்த பாக்கித்தான் துடுப்பாளர் ஆனார்.[20]
  • முகமது நவாஸ் (பாக்) தனது முதலாவது தேர்வுப் போட்டி ஐவீழ்த்தலைப் பெற்றார்.[21]
  • பாபர் அசாம் (பாக்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[22]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: பாக்கித்தான் 12, இலங்கை 0.

2-வது தேர்வு

[தொகு]
24–28 சூலை 2022
ஆட்டவிபரம்
378 (103 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 80 (137)
நசீன் சா 3/58 (18 நிறைவுகள்)
231 (88.1 நிறைவுகள்)
அகா சல்மான் 62 (126)
ரமேசு மெண்டிசு 5/47 (21.1 நிறைவுகள்)
360/8வி (91.5 நிறைவுகள்)
தனஞ்சய டி சில்வா 109 (171)
நசீம் சா 2/44 (12.5 நிறைவுகள்)
261 (77 நிறைவுகள்)
பாபர் அசாம் 81 (146)
பிரபாத் ஜெயசூரிய 5/117 (32 நிறைவுகள்)
இலங்கை 246 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆஇ)
ஆட்ட நாயகன்: தனஞ்சய டி சில்வா (இல)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. Retrieved 11 October 2019.
  2. "Takeaways: Are Pakistan dark horses for the 2023 World Test Championship?". ESPN Cricinfo. Retrieved 26 June 2021.
  3. "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022". The Papare. Retrieved 5 January 2022.
  4. "England, New Zealand set to tour Pakistan in November-December". CricBuzz. Retrieved 15 April 2022.
  5. "Pakistan announce busy 12 months for national sides". Pakistan Cricket Board. Retrieved 15 April 2022.
  6. "Pakistan to Play Two Tests, Three ODIs in Sri Lanka". Sports NDTV. Retrieved 4 April 2022.
  7. "ODIs scrapped from Pakistan's tour of Sri Lanka in July 2022". ESPN Cricinfo. Retrieved 9 May 2022.
  8. "Pakistan to play only two tests in Sri Lanka as ODIs scrapped from tour". The Papare. Retrieved 10 May 2022.
  9. "Pakistan to tour Sri Lanka for two Tests in July". CricBuzz. Retrieved 22 June 2022.
  10. "Sri Lanka confirm itinerary for World Test Championship series against Pakistan". International Cricket Council. Retrieved 22 June 2022.
  11. "2nd Test venue shift: Pakistan Tour of Sri Lanka 2022". Sri Lanka Cricket. Retrieved 17 July 2022.
  12. "Shafique's epic 160* leads Pakistan to fourth-innings glory". ESPN Cricinfo. Retrieved 20 July 2022.
  13. "Shafique's marathon knock, Pakistan's record chase, and Jayasuriya's dream start". ESPN Cricinfo. Retrieved 20 July 2022.
  14. "Jayasuriya and Mendis spin Sri Lanka to a series-levelling win". The Papare. Retrieved 28 July 2022.
  15. "Jayasuriya, Mendis rattle Pakistan as Sri Lanka level series". ESPN Cricinfo. Retrieved 28 July 2022.
  16. "Sri Lanka name squad for Pakistan Test series". CricBuzz. Retrieved 14 July 2022.
  17. "Yasir Shah returns for Sri Lanka Tests". Pakistan Cricket Board. Retrieved 22 June 2022.
  18. "Nissanka returns, Manasinghe replaces injured Theekshana for the second Test". ESPN Cricinfo. Retrieved 21 July 2022.
  19. "Knee injury rules Pakistan's Shaheen Shah Afridi out of second Test against Sri Lanka". ESPN Cricinfo. Retrieved 21 July 2022.
  20. "Babar Azam completes 10000 international runs, surpasses Virat Kohli to achieve big milestone". My Khel. Retrieved 17 July 2022.
  21. "Fifties from Oshada Fernando, Kusal Mendis and Dinesh Chandimal put Sri Lanka in command". ESPN Cricinfo. Retrieved 18 July 2022.
  22. "SL vs PAK: Babar Azam completes his 3000 career runs". BOL News. Archived from the original on 25 ஜூலை 2022. Retrieved 19 July 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "Unprecedented highs and haunting lows - Mathews' complicated journey to 100 Tests". ESPN Cricinfo. Retrieved 24 July 2022.
  24. "De Silva, Karunaratne stretch Sri Lanka lead over Pakistan". France24. Retrieved 27 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]