உள்ளடக்கத்துக்குச் செல்

பாகைமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவவியலில், பாகைமானி அல்லது கோணமானி (Protractor) கோணங்களை அளவிடும், பொதுவாக ஊடுபுகக்கூடிய பேர்பெக்சாலான, ஒரு சதுர, வட்ட அல்லது அரை வட்டக் கருவியாகும். இதில் பயன்படுத்தப்படும் அளவை அலகுகள் பொதுவாக பாகை (°) ஆகும். இது இயந்திர மற்றும் பொறியியல் தொடர்பான பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுகிறது, ஆனால் மிகவும் பொதுவான பயன்பாடு பள்ளிகளில் வடிவவியல் பாடங்களில் இருக்கும். சில பாகைமானிகள் எளிய அரைத் தட்டுக்களாகும். சரிவு கோணமானி போன்ற மேலும் மேம்பட்ட கோணமானிகளில், கோணம் அளவிட உதவும் ஒன்று அல்லது இரண்டு அசையும் கரங்கள் உண்டு.

காட்சியகம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகைமானி&oldid=2052322" இலிருந்து மீள்விக்கப்பட்டது