பவுல் சாமுவேல்சன்
பிறப்பு | கேரி, இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடு | மே 15, 1915
---|---|
இறப்பு | திசம்பர் 13, 2009 பெல்மோன்ட், மாசச்சூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு | (அகவை 94)
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
நிறுவனம் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் |
துறை | பருப்பொருளியல் |
கல்விமரபு | புதுக் கீனீசியப் பொருளியல் |
பயின்றகம் | ஹார்வர்டு பல்கலைக்கழகம், (முனைவர்) சிக்காகோ பல்கலைக்கழகம், (இளங்கலை) |
தாக்கம் | கெயின்ஸ் • யோசஃப் ஷூம்பீட்டர் • வாசிலி லியோன்தீப் • கோட்பிரைடு ஹாபெர்லெர் • ஆல்வின் ஹான்சென் • எட்வின் வில்சன் • நுட் விக்செல் • எரிக் லிண்டா |
தாக்கமுள்ளவர் | இசுடான்லி பிஷர் • லாரன்சு கிளீன் • இராபர்ட் மெர்டன் • இராபர்ட் சோலோவ் • எட்மண்ட் ஃவெல்ப்ஸ் • சுப்பிரமணியம் சுவாமி • பால் கிரக்மேன் |
பங்களிப்புகள் | புதுச்செவ்வியல் தொகுப்பு கணிதப் பொருளியல் பொருளியல் செயல்முறை பன்னாட்டு வணிகம் பொருளியல் வளர்ச்சி பொதுப் பண்டம் |
விருதுகள் | ஜான் பேட்சு கிளார்க்கு பதக்கம் (1947) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (1970) |
ஆய்வுக் கட்டுரைகள் |
பவுல் அந்தோணி சாமுவேல்சன் (Paul Anthony Samuelson, மே 15, 1915 – திசம்பர் 13, 2009) அமெரிக்க பொருளியல் அறிஞரும், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசுப் பெற்ற முதல் அமெரிக்கரும் ஆவார். இந்த நோபல் பரிசினை வழங்கும்போது சுவீடிய அரச அகாதமியினர் இவர் " பொருளியல் கோட்பாடுகளில் அறிவியல்சார் பகுத்தறிதலை உயர்த்துவதில் வேறெந்த சமகால பொருளியலாளரை விட கூடுதலாகப் பங்களித்துள்ளார்" எனக் கூறியுள்ளது.[1] பொருளியல் வரலாற்றாளர் ரண்டால் ஈ. பார்க்கர் இவரை "தற்காலப் பொருளியலின் தந்தை ",[2] என்றும் த நியூயார்க் டைம்ஸ் இவர் "இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பொருளியல் கல்வியாளர்"[3] என்றும் புகழ்ந்துள்ளனர்.
இவர் எக்காலத்திலும் மிகுந்த விற்பனையாகியுள்ள பொருளியல் பாடநூலை எழுதியுள்ளார்: பொருளியல்: ஓர் அறிமுக பகுப்பாய்வு முதலில் 1948இல் வெளியானது. கெயின்சியப் பொருளியலின் கோட்பாடுகளை விளக்கிய இரண்டாவது அமெரிக்க பாடநூலாக இது இருந்தது. இதற்கு முன்னதாக 1947இல் லோரீ டார்சிசு எழுதிய பொருளியலின் கூறுகள் என்ற நூல் முதலாவதாக அமைந்தாலும் அது வெற்றி பெறவில்லை. சாமுவேல்சனின் நூல் தற்போது 19 பதிப்புகளைக் கண்டுள்ளது; 40 மொழிகளில் ஏறத்தாழ 4 மில்லியன் படிகள் விற்கப்பட்டுள்ளது. 1996இல் இவருக்கு அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருதான தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது.[1]
மேலும் அறிய
[தொகு]- Dixit, Avinash (2012), "Paul Samuelson's Legacy", Annual Review of Economics, Annual Reviews, 4: 1–31, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1146/annurev-economics-080511-110957
- Fischer, Stanley (1987), "Samuelson, Paul Anthony", The New Palgrave: A Dictionary of Economics, London: Macmillan, vol. 4, pp. 234–241, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-935859-10-1.
- Silk, Leonard (1976), The Economists, New York: Basic Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-01810-6.
- Sobel, Robert (1980), The Worldly Economists, New York: Free Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-929780-X.
- Fusfeld, Daniel R. (2002), "The Neoclassical Synthesis", The Age of the Economist (9th ed.), Boston: Addison-Wesley, pp. 198–201, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-321-08812-3.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Frost, Greg (Dec. 13, 2009). "Nobel-winning economist Paul A. Samuelson dies at age 94". MIT News.
{{cite web}}
: Check date values in:|date=
(help) "In a career that spanned seven decades, he transformed his field, influenced millions of students and turned MIT into an economics powerhouse" - ↑ Parker, Randall E. (2002), Reflections on the Great Depression, Cheltenham: Edward Elgar, p. 25, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84376-335-4
- ↑ Weinstein, Michael M. (13 December 2009). "Paul A. Samuelson, Economist, Dies at 94". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2009/12/14/business/economy/14samuelson.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- Biography at the Nobel e-Museum பரணிடப்பட்டது 2001-12-02 at the வந்தவழி இயந்திரம்
- 1970 Press Release, Nobel Prize in Economics பரணிடப்பட்டது 2003-08-15 at the வந்தவழி இயந்திரம்
- A History of Economic Thought biography பரணிடப்பட்டது 2004-08-06 at the வந்தவழி இயந்திரம்
- the scientific work through which he has developed static and dynamic economic theory and actively contributed to raising the level of analysis in economic science.
- Yale Honorand Biography பரணிடப்பட்டது 2007-10-14 at the வந்தவழி இயந்திரம்
- Nobel-winning economist Paul A. Samuelson dies at age 94
- New York Times Obituary (14 December 2009)
- Paul Samuelson - Daily Telegraph obituary
- Paul Samuelson Memorial Session (January 4, 2010), American Economic Association meetings, Webcast links to remarks of: Solow & Diamond (after intro) in Part 1 பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம் (34 min.); Dixit, Merton, Poterba, & Hall (including read remarks of Arrow & Fischer) Part 2 பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம் (48 min.).