உள்ளடக்கத்துக்குச் செல்

பவுலா சுழ்கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுலா சுழ்கோடி
பிறப்புசூலை 17, 1948 (1948-07-17) (அகவை 76)
டெடராயிட், மிச்சிகான்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்வாழ்சிங்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகான் அரசு பல்கலைக்கழகம், வாழ்சிங்டன் பல்கலைக்கழகம்
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது
இணையதளம்
http://www.astro.washington.edu/szkody/

பவுலா சுழ்கோடி (Paula Szkody) (ஜூலை 17, 1948- )[1] சீட்டிலில் உள்ள வாழ்சிங்டன் பல்கலைக்கழக வானியல் துறையின் பேராசிரியர் ஆவார்.[2]

இளமையும் கல்வியும்

[தொகு]

இவர் 1948 ஜூலை 17 இல் மிச்சிகன் டெடராயிட்டில் பிறந்தார். இவர் வானியற்பியலில் தன் இளங்கலைப் பட்டத்தை மிச்சிகன் அரசு பல்கலைக்கழகத்தில் 1970 இல் பெற்றார். இவர் வானியலில் தன் முனைவர் பட்டத்தை 1975 இல் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1]

வாழ்க்கைப் பணி

[தொகு]

இவர் அழிதகவு மாறும் விண்மீன்களைப் பற்றிய ஆய்வில் வல்லுனர் ஆவார். இவ்வகை விண்மீன்கள் குறிப்பிட்ட அலைவுநேர இடைவெளிகளில் வெடிப்பு ஆற்றலை வெளியிடுகின்றன.[2] இவர் சுலோவான் இலக்கவியல் வானளக்கை முனைவாகச் செயல்படுகிறார். இத்திட்டம் குறுமீன் வெடிப்புகளின் தேட்ட்த்தில் ஈடுபடுகிறது. இவர் உரோசி X-கதிர் நேர அமைவு தேட்டக்கலம், அண்டவியல், வானியற்பியலுக்கான சிறப்பு செயற்கைக்கோள் உரோசி ஒளியியல் செயற்கைக்கோள் (ரோசாட்), பன்னாட்டு புற ஊதா தேட்டக்கலம் அபுள் விண்வெளித் தொலைநோக்கி, அறுதிநிலைப் புற ஊதா தேட்டக்கலம், XMM-நியூட்டன் விண்வெளி திட்டங்கள் ஆகிய மேலும் பல திட்டங்களில் பங்கேற்கிறார்.[3]

செயற்பாடுகள்

[தொகு]

இவர் 2005 இல் பசிபிக் வானியல் கழக வானியல் இதழின் முதன்மைப் பதிப்பாசிரியர் ஆனார்.[4] இவர் பயில்நிலை-தொழில்முறை வானியலாளர்களை ஒருங்கிணைப்பதில் முணைவாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க மாறும் விண்மீன் கழகத்தின் சார்பாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்;[3] இக்கழகத்தின் கள அலுவலராக 2003 முதல் 2009 வரை செயல்பட்டார். இவர் 2007 முதல் 2009 வரை இக்கழகத்தின் தலைவராக இருந்தார்.[5]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]

இவர் 1978 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான [[ஆன்னி ஜம்ப் கெனான்} விருதைப் பெற்றார்.[1][6]

இவர் 1994 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர் ஆவார்.[1] ஒரு சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Oakes, Elizabeth H. "Szkody, Paula." பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் Encyclopedia of World Scientists, Revised Edition. New York: Facts On File, Inc., 2007. American History Online. Facts On File, Inc. (accessed October 20, 2015).
  2. 2.0 2.1 "Paula's Astronomy Page". University of Washington Astronomy Department. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Interview: Paula Szkody". Cataclysmic Variable Network (CVnet). 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  4. "Paula Szkody Appointed Editor of PASP « Astronomical Society". Astrosociety.org. Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  5. Saladyga, Michael; Waagen, Elizabeth O. "Professional Astronomers in Service to the AAVSO" (PDF). The American Association of Variable Star Observers. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  6. "Annie Jump Cannon Award in Astronomy | American Astronomical Society". Aas.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  7. Schmadel, Lutz (2015). Dictionary of Minor Planet Names Addendum to 6th Edition: 2012-2014. Springer International Publishing. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319176772. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுலா_சுழ்கோடி&oldid=3566836" இலிருந்து மீள்விக்கப்பட்டது