பவுரி
Appearance
பவுரி என்பது முருகன் ஆடிய ஆட்டங்களில் ஒன்று. வேலன் ஆடும் வெறியாட்டம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. திருச்செந்தூர் கடலோரம் உள்ள ஊர். பௌவம் என்னும் சொல் அலையையும், அலையெறியும் கடலையும் குறிக்கும். முருகன் சூரபன்பனைக் கடல் நடுவே கொன்ற வரலாற்றைக் கொண்ட ஊர் திருச்செந்தூர். முருகன் பௌவத்தில் ஆடிய ஆட்டம் ‘பவுரி’. இந்த ஆட்டத்தை 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய சில நூல்கள் குறிப்பிடுகின்றன.
- திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - 15 ஆம் நூற்றாண்டு [1]
- கந்தர் அலங்காரம் - 14 ஆம் நூற்றாண்டு [2]
- கண்ணுடைய வள்ளல் எழுதிய ஒழிவிலொடுக்கம் - கி. பி. 1400-1425 [3]
- வில்லிபாரதம் -அருணகிரிநாதருக்குச் சற்று முந்திய காலம் [4]
- காளத்திநாதர் உலா – 16 ஆம் நூற்றாண்டு [5]
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005