பவன் குமார் சாம்லிங்
பவன் குமார் சாம்லிங் | |
---|---|
தொகுதி | நம்ச்சி, சிக்கிம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 22, 1950 யாங்கங் சிக்கிம், இந்தியா |
அரசியல் கட்சி | சிக்கிம் சனநாயக முன்னணி |
துணைவர் | டிகா மாயா சாம்லிங் (இரண்டாம் மனைவி) |
வாழிடம் | நம்ச்சி , சிக்கிம், இந்தியா |
சமயம் | கிராதே ராய் சாம்லிங் |
பவன் குமார் சாம்லிங் (Pawan Kumar Chamling, பிறப்பு: 22 செப்டம்பர், 1950) இந்தியாவில் இணைக்கப்பட்டபின் உருவான சிக்கிம் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஆவார். சாம்லிங் சார்ந்துள்ள சிக்கிம் சனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை -1994, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது.
வாழ்க்கை
[தொகு]ஓர் சமூக சேவகராக இருந்த சாம்லிங் "நிர்மாண்" இதழின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். 1973ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோதே அரசியல் நாட்டம் கொண்டார்.1985ஆம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1989 முதல் 1992 வரை மாநில அரசின் தொழில்,தகவல் மற்றும் மக்கள்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றினார்.1993ஆம் ஆண்டு சிக்கிம் சனநாயக முன்னணி கட்சியை நிறுவினார். இவரது கட்சி 1994ஆம் ஆண்டு தேர்தலில் வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தொடர்கிறார்.
பல நூல்களை வெளியிட்டுள்ளார்.1967ஆம் ஆண்டு அவரது முதல் நூல்,பிர் கோ பரிச்சய் வெளியானது.[1] திருமணமான இவருக்கு நான்கு மகள்களும் நான்கு மகன்களும் உள்ளனர்.2003ஆம் ஆண்டு மணிப்பால் பல்கலைக்கழகம் கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DR. Pawan Kumar CHAMLING - THE FIFTH CHIEF MINISTER OF Sikkim" (in en). http://sikkim.nic.in/cmonline/homepage.htm.
வெளியிணைப்புகள்
[தொகு]- நீண்டகாலம் பதவி வகிக்கும் சிக்கிம் முதல்வர்: ஜோதி பாசு சாதனையை முறியடித்தார் சாம்லிங்
- pawan-chamling.org பவன் குமார் சாம்லிங்கின் இணையத்தளம்.
- Pawan Chamling on sikkim.nic.in website.
- Pawan Chamling Speech பரணிடப்பட்டது 2011-01-08 at the வந்தவழி இயந்திரம் (PDF), 21 December 2002, 50th National Development Council Meeting, New Delhi.
- Interview with Chief Minister Pawan Chamlingபரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம் posted on sikkimonline.info in April 2007.