பழைய ஜாவானிய மொழி
பழைய ஜாவானிய மொழி Old Javanese Bahasa Jawa Kuno | |
---|---|
ᬚᬯ | |
உச்சரிப்பு | kaw |
நாடு(கள்) | இந்தோனேசியா |
பிராந்தியம் | சாவகம் (தீவு), பாலி மதுரா (தீவு), லொம்போக் |
ஊழி | 13–14 ஆம் நூற்றாண்டு |
ஆஸ்திரோனீசிய
| |
காவி எழுத்து முறை, ஜாவானியம், பாலினியம் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | kaw |
ISO 639-3 | kaw |
மொழிசார் பட்டியல் | kaw |
மொழிக் குறிப்பு | kawi1241[1] |
பழைய ஜாவானிய மொழி அல்லது காவி மொழி (ஆங்கிலம்: Old Javanese; இந்தோனேசியம்: Bahasa Jawa Kuno; ஜாவானியம்: ꦨꦴꦰꦴꦗꦮ) என்பது ஜாவானிய மொழிகளில் மிகப் பழமையான மொழியாகும்.
இந்த மொழி தற்போதைய இந்தோனேசியாவின் மத்திய ஜாவா, கிழககு ஜாவா ஆகிய பகுதிகளில் 13–14 ஆம் நூற்றாண்டுகளில் பேசப்பட்டது.
ஓர் இலக்கிய மொழியாக, பழைய ஜாவானிய மொழி ஜாவா, மதுரா, பாலி மற்றும் லொம்போக் தீவுகளிலும் பயன்படுத்தப்பட்டது. இது சமசுகிருத மொழியில் இருந்து கணிசமான அளவிற்குச் சொற்களைப் பெற்று; தனி ஒரு சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தது.
வரலாறு
[தொகு]பழைய ஜாவானிய மொழியில் எழுதப்பட்டதற்கான சான்றுகள் கி.பி 450 ஆம் ஆண்டின் சமசுகிருத தருமநகரா கல்வெட்டில் (Tarumanegara inscription) உள்ளன. ஜாவானிய மொழியில் முழுமையாக எழுதப்பட்ட மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 25 மார்ச் 804 என தேதியிட்ட சுகபூமி கல்வெட்டு ஆகும்.
கிழக்கு ஜாவாவின் கேடிரி குறுமாநிலத்தில் (Kediri Regency) உள்ள பாரே மாவட்டத்தில் (Pare District) காணப்படும் சுகபூமி கல்வெட்டு (Sukabumi inscription).
சுகபூமி கல்வெட்டு
[தொகு]இந்தச் சுகபூமி கல்வெட்டு சுமார் 120 ஆண்டுகளுக்கு முந்தைய தேதியிட்ட கல்வெட்டின் நகலாகும். இந்த நகல் மட்டுமே தற்போது பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டின் உள்ளடக்கம் சிறீ அரிஞ்சிங் (Srinjing) நதிக்கு அருகில் ஒரு பாசன கால்வாய்க்கு அணை கட்டுவது தொடர்பானது.
சுகபூமி கல்வெட்டு பல்லவ எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கடைசி வகை கல்வெட்டாகும். இதன் பின்னர் தொடர்ச்சியாக வெளிவந்த அனைத்துக் கல்வெட்டுகளும் காவி எழுத்து முறையில் எழுதப்பட்டன.[2]
வளர்ச்சி
[தொகு]பழைய ஜாவானிய மொழி நிலையானதாகச் செயல்படவில்லை. மேலும் அதன் பயன்பாட்டுக் காலம் என்பது சுகபூமி கல்வெட்டில் இருந்து; 1292-இல் மஜபாகித் பேரரசு நிறுவப்படும் வரையில் சுமார் 500 ஆண்டுகளை மட்டுமே கொண்டது.
மஜபாகித் காலத்தில் பேசப்பட்டு எழுதப்பட்ட ஜாவானிய மொழி ஏற்கனவே சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில் தற்போதைய நவீன ஜாவானிய மொழிக்கு, மஜபாகித் காலத்து ஜாவானிய மொழி நெருக்கமாக உள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kawi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Arps, Bernard (2019-09-02). "The power of the heart that blazes in the world: An Islamic theory of religions in early modern Java". Indonesia and the Malay World 47 (139): 308–334. doi:10.1080/13639811.2019.1654217. பன்னாட்டுத் தர தொடர் எண்:1363-9811.
நூல்கள்
[தொகு]- De Casparis, J. G (1975). Indonesian Palaeography: A History of Writing in Indonesia from the beginnings to c. AD 1500. Leiden/Köln: E. J. Brill.
- Florida, Nancy K. (1993). Javanese Literature in Surakarta Manuscripts: Introduction and Manuscripts of the Karaton Surakarta. Ithaca, N.Y.: Cornell University. ISBN 0-87727-603-X.
- Wilhelm von Humboldt (1836). Über die Kawi-Sprache [On the Kawi Language] (in German): Vol 1, Vol 2, Vol 3
- Poerbatjaraka; Tardjan Hadiwidjaja (1952). Kepustakaan Djawa. Djakarta/Amsterdam: Djambatan.
- Avenir Stepanovich Teselkin (1972). Old Javanese (Kawi). Cornell University. Modern Indonesia Project. Translation series. Ithaca, N.Y.: Modern Indonesia Project, Southeast Asia Program, Cornell University.
- Zurbuchen, Mary S. (1976). Introduction to Old Javanese Language and Literature: A Kawi Prose Anthology. Ann Arbor: University of Michigan. doi:10.3998/mpub.11902952. hdl:20.500.12657/41870. ISBN 9780472902187.
- 1992–1993, Bahasa parwa : tatabahasa Jawa Kuna: Yogyakarta: Gadjah Mada University Press. Bekerja sama dengan I.J. Poedjawijatna. Cetakan ulang dari edisi tahun 1954
வெளி இணைப்புகள்
[தொகு]- About lontar (palmleaf manuscripts).
- Zoetmulder's Dictionary of Old Javanese (SEAlang Library)
- Old Javanese inscriptions (SEAlang Library)
- An Introduction to Old Javanese at Tokyo University of Foreign Studies (A pdf primer in English, though the web page is in Japanese)