உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிக்கல் பசார்

ஆள்கூறுகள்: 11°9′0″N 75°54′0″E / 11.15000°N 75.90000°E / 11.15000; 75.90000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிக்கல் பசார்
பள்ளிக்கல்
கணக்கெடுப்பு ஊர்
கோழிக்கோடு பல்கலைக்கழகம்
பள்ளிக்கல் பசார் is located in கேரளம்
பள்ளிக்கல் பசார்
பள்ளிக்கல் பசார்
கேரளத்தில் அமைவிடம்
பள்ளிக்கல் பசார் is located in இந்தியா
பள்ளிக்கல் பசார்
பள்ளிக்கல் பசார்
பள்ளிக்கல் பசார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°9′0″N 75°54′0″E / 11.15000°N 75.90000°E / 11.15000; 75.90000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • வகைஉள்ளூர்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்38,166
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673634, 673636
வாகனப் பதிவுKL-84
அருகில் உள்ள மாநகரம்கோழிக்கோடு
அருகில் உள்ள நகரம்கொண்டோட்டி, ஃபெரோக்
மக்களவைத் தொகுதிமலப்புறம்
சட்டமன்றத் தொகுதிவள்ளிக்குன்னு
வட்டம்கொண்டோட்டி
தொலைபேசி குறியீடு0483, 0494
பள்ளிக்கல் பஜாரின் குழந்தைகள்
பள்ளிக்கல் பஜார் டி-ஜங்ஷனில் உள்ள சுன்னி மதரஸா

பள்ளிக்கல் (Pallikkal Bazar) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டோட்டி வட்டத்தில் உள்ள T- வடிவ நகரம், கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். [1]

கரிப்பூரில் உள்ள கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் பள்ளிக்கல் அருகே உள்ளது.

பள்ளிக்கல் பஜார்  கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலிருந்தும், கொண்டோட்டியிலிருந்தும் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

கேரளாவின் முதல் அக்ஷயா மையம் பள்ளிக்கல் கிராம ஊராட்சியில் தொடங்கப்பட்டது. ஏ.எம்.எல்.பி பள்ளி பள்ளிக்கல் பசாரில் உள்ளது.

முன்மொழியப்பட்ட கரிப்பூர்-கொண்டோட்டி நகராட்சி

[தொகு]

முன்மொழியப்பட்டள்ள கரிப்பூர்-கொண்டோட்டி நகராட்சியில் அடங்கியுள்ள பகுதிகள் பின்வறுமாறு;

  • கொண்டோட்டி ஊராட்சி (கொண்டோட்டி கிராமங்கள் மற்றும் கரிப்பூரின் ஒரு பகுதி)
  • நெடியிருப்பு ஊராட்சி (நெடியிருப்பு கிராமங்கள் மற்றும் கரிப்பூரின் ஒரு பகுதி)
  • பள்ளிக்கல் ஊராட்சி (பள்ளிக்கல் கிராமங்கள் மற்றும் கரிப்பூரின் ஒரு பகுதி)
  • புலிக்கல் ஊராட்சி
  • செருகாவு ஊராட்சி
  • வாழையூர் ஊராட்சி

மொத்த பரப்பளவு: 122.99 கிமீ 2

மொத்த மக்கள் தொகை (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு): 152,839

மக்கள்தொகையியல்

[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிக்கல்லின் மொத்த மக்கள் தொகை 38166 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 18945 என்றும், பெண்களின் எண்ணிக்கை 19221 என்றும் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் பள்ளிக்கல் ஊராட்சியில் அமைந்துள்ளது. இது பள்ளிக்கல் பஜார் ஊரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஃபெரோக், பரப்பனங்காடி, வள்ளிக்குன்னு தொடருந்து நிலையங்கள் ஆகும். அருகில் உள்ள பெரிய தொடருந்து நிலையம் 20 கிமீ தொலைவில் உள்ள கோழிக்கோடு தொடருந்து நிலையம் ஆகும்.

பள்ளிக்கல் பஜார் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சாலை மற்றும் உள்ளூர் பேருந்து போக்குவரத்து அமைப்புகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 66 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 966 பள்ளிக்கல் பஜாரில் இருந்து முறையே 2.5 கிமீ மற்றும் 3 கிமீ தொலைவில் உள்ளன. இந்த நகரம் கக்கஞ்சேரி-கொட்டாபுரம் சாலையில் அமைந்துள்ளது, இது ஒரு முக்கிய சாலையாகும். இச்சாலை தே.நெ-66 மற்றும் தே.நெ-966 இக்கு இடையேயான முக்கிய இணைப்பாகவும் உள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிக்கல்_பசார்&oldid=3882493" இலிருந்து மீள்விக்கப்பட்டது