பல்நிறைவுறா கொழுப்பு அமிலம்
Appearance
பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் [Polyunsaturated fatty acids, (PUFAs]) ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாகும். இப்பிரிவில், பல முக்கிய சேர்மங்களான இன்றியமையா கொழுப்பு அமிலங்களும், உலர் எண்ணெய் பண்புகளைக் கொண்டவையும் உள்ளன.
வேதி வடிவங்களைக் கொண்டு பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் பல்வேறு குழுமங்களாகப் பிரிக்கப்படுகின்றன:
மெத்திலீன்-இடைமறி பாலியீன்கள்
[தொகு]-C-C=C-C-C=C- |
பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், ஒற்றை மெத்திலீன் தொகுதியால் இடைமறிக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒருபக்க இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன. (இவ்வடிவம் சில வேளைகளில், டைவீனைல் மீத்தேன் அமைப்பு என்றழைக்கப்படுகின்றது ) [1]
அனைத்து இன்றியமையா கொழுப்பு அமிலங்களும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 மெத்திலீன் இடைமறிக்கப்பட்ட கொழுப்பு அமிலங்களாகும்.
பொது பெயர் | கொழுமிய பெயர் | வேதி பெயர் |
---|---|---|
ஹெக்சாடெக்காடிரையீனோயிக் அமிலம் (HTA) | 16:3 (n-3) | அனைத்து ஒருபக்க 7,10,13-ஹெக்சாடெக்காடிரையீனோயிக் அமிலம் |
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) | 18:3 (n-3) | அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம் |
இஸ்டீரிடோனிக் அமிலம் (SDA) | 18:4 (n-3) | அனைத்து ஒருபக்க-6,9,12,15,-ஆக்டாடெக்காடெட்ராயீனோயிக் அமிலம் |
இகோசாடிரையீனோயிக் அமிலம் (ETE) | 20:3 (n-3) | அனைத்து ஒருபக்க-11,14,17-இகோசாடிரையீனோயிக் அமிலம் |
இகோசாடெட்ராயீனோயிக் அமிலம் (ETA) | 20:4 (n-3) | அனைத்து ஒருபக்க-8,11,14,17-இகோசாடெட்ராயீனோயிக் அமிலம் |
இகோசாபென்டாயீனோயிக் அமிலம் (EPA, டிம்னோடோனிக் அமிலம்) | 20:5 (n-3) | அனைத்து ஒருபக்க-5,8,11,14,17-இகோசாபென்டாயீனோயிக் அமிலம் |
ஹெனெய்கோசாபென்டாயீனோயிக் அமிலம் (HPA) | 21:5 (n-3) | அனைத்து ஒருபக்க-6,9,12,15,18-ஹெனெய்கோசாபென்டாயீனோயிக் அமிலம் |
டொகோசாபென்டாயீனோயிக் அமிலம் (DPA, குளுபனோடோனிக் அமிலம்) | 22:5 (n-3) | அனைத்து ஒருபக்க-7,10,13,16,19-டொகோசாபென்டாயீனோயிக் அமிலம் |
டொகோசாஹெக்சாயீனோயிக் அமிலம் (DHA, செர்வோனிக் அமிலம்) | 22:6 (n-3) | அனைத்து ஒருபக்க-4,7,10,13,16,19-டொகோசாஹெக்சாயீனோயிக் அமிலம் |
டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம் | 24:5 (n-3) | அனைத்து ஒருபக்க-9,12,15,18,21-டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம் |
டெட்ராகோசாஹெக்சாயீனோயிக் அமிலம் (நிசினிக் அமிலம்) | 24:6 (n-3) | அனைத்து ஒருபக்க-6,9,12,15,18,21-டெட்ராகோசாஹெக்சாயீனோயிக் அமிலம் |
பொது பெயர் | கொழுமிய பெயர் | வேதி பெயர் |
---|---|---|
லினோலெயிக் அமிலம் | 18:2 (n-6) | அனைத்து ஒருபக்க-9,12-ஆக்டாடெக்காடையீனோயிக் அமிலம் |
காமா-லினோலெனிக் அமிலம் (GLA) | 18:3 (n-6) | அனைத்து ஒருபக்க-6,9,12-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம் |
இகோசாடையீனோயிக் அமிலம் | 20:2 (n-6) | அனைத்து ஒருபக்க-11,14-இகோசாடையீனோயிக் அமிலம் |
டைஹோமோ-காமா-லினோலெனிக் அமிலம் (DGLA) | 20:3 (n-6) | அனைத்து ஒருபக்க-8,11,14-இகோசாடிரையீனோயிக் அமிலம் |
அராகிடோனிக் அமிலம் (AA) | 20:4 (n-6) | அனைத்து ஒருபக்க-5,8,11,14-இகோசாடெட்ராயீனோயிக் அமிலம் |
டொகோசாடையீனோயிக் அமிலம் | 22:2 (n-6) | அனைத்து ஒருபக்க-13,16-டொகோசாடையீனோயிக் அமிலம் |
அட்ரெனிக் அமிலம் | 22:4 (n-6) | அனைத்து ஒருபக்க-7,10,13,16-டொகோசாடெட்ராயீனோயிக் அமிலம் |
ஆஸ்பான்ட் அமிலம் | 22:5 (n-6) | அனைத்து ஒருபக்க-4,7,10,13,16-டொகோசாபென்டாயீனோயிக் அமிலம் |
டெட்ராகோசாடெட்ராயீனோயிக் அமிலம் | 24:4 (n-6) | அனைத்து ஒருபக்க-9,12,15,18-டெட்ராகோசாடெட்ராயீனோயிக் அமிலம் |
டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம் | 24:5 (n-6) | அனைத்து ஒருபக்க-6,9,12,15,18-டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம் |
ஒமேகா-9
[தொகு]பொது பெயர் | கொழுமிய பெயர் | வேதி பெயர் |
---|---|---|
ஒலெயிக் அமிலம்† | 18:1 (n-9) | ஒருபக்க-9-ஆக்டாடெக்கனோயிக் அமிலம் |
இகோசனோயிக் அமிலம்† | 20:1 (n-9) | ஒருபக்க-11-இகோசனோயிக் அமிலம் |
மீட் அமிலம் | 20:3 (n-9) | அனைத்து ஒருபக்க-5,8,11-இகோசாடிரையீனோயிக் அமிலம் |
எருசிக் அமிலம்† | 22:1 (n-9) | ஒருபக்க-13-டொகோசனோயிக் அமிலம் |
நெர்வோனிக் அமிலம்† | 24:1 (n-9) | ஒருபக்க-15-டெட்ராகோசனோயிக் அமிலம் |
†ஒற்றைநிறைவுறா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baggott, James (1997). The divinylmethane pattern in fatty acids. Salt Lake City, UT: Knowledge Weavers.