பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
நிறுவப்பட்டது | 2010 |
---|---|
வகை | சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி |
துறை முதல்வர் | முனைவர் பி. சக்திவேல் |
ஆசிரியர்கள் | 45+ |
மாணவர்கள் | 850+ |
அமைவு | காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா (12°31′N 79°25′E / 12.52°N 79.42°E) |
இணையதளம் | www |
பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் (University College of Engineering, Kanchipuram) (யு.சி.கே.இ எனவும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி 2010 இல் நிறுவப்பட்டது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு கணினி அறிவியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் , இயந்திரப் பொறியியல் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் மூலம் இந்த கல்லூரி 2010 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக கல்லூரியாக நிறுவப்பட்டது. 2011 ஆம் ஆண்டு, கல்லூரிக்கான நிரந்தர வளாகமானது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை, காரைப்பேட்டை கிராமத்தில் அமைக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. புதிய வளாகமானது மொத்தம் சுமார் 10.4 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. 2012 சூன் நிலவரப்படி, 4 ஆய்வகங்கள், 4 வகுப்பு அறைகள், அலுவலகம் மற்றும் முதல்வர் அறை போன்ற ஆரம்ப கட்டுமானங்கள் நிறைவடைந்தன.
இதையடுத்து 5 ஏப்ரல் 2013 அன்று, முதல்வர் அலுவலகம் மற்றும் 4 வகுப்பு அறைகள் தற்காலிக இடத்திலிருந்து புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
27. நவம்பர், 2013 அன்று, மாணவிகள் விடுதியானது அருகில் பாரந்தூர் சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது, இந்த புதிய கட்டிடமானது காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மாணவர், மாணவியருக்கான விடுதிகளுடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் நிர்வாகத் தொகுதிகளின் கட்டும் பணி 2014-15 கல்வியாண்டில் நிறைவடைந்தது.
இருப்பிடம்
[தொகு]இந்த கல்லூரி முதலில் காஞ்சிபுரத்திலிருந்து 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) தொலைவில் உள்ள காரைப்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலை 4 க்கு அருகில் அமைந்தது .
2017 ஆம் ஆண்டில், கல்லூரி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை ( தேசிய நெடுஞ்சாலை -4, ) பொன்னரிகரையில் பிராந்திய போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகிலுள்ள புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. [1]
நிர்வாகம்
[தொகு]காஞ்சிபுரம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு கல்லூரியாக இருப்பதால், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Anna University, Chennai - 600025" (PDF). Annaunive.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.