உள்ளடக்கத்துக்குச் செல்

பலானி அருவி

ஆள்கூறுகள்: 31°59′54″N 77°08′26″E / 31.99847°N 77.14043°E / 31.99847; 77.14043
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலானி அருவி
பலானி அருவி is located in இமாச்சலப் பிரதேசம்
பலானி அருவி
இமாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
பலானி அருவி is located in இந்தியா
பலானி அருவி
பலானி அருவி (இந்தியா)
Map
அமைவிடம்குல்லு மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு31°59′54″N 77°08′26″E / 31.99847°N 77.14043°E / 31.99847; 77.14043
வகைஎழுச்சி
மொத்த உயரம்150 மீ (492 அடி)[1]

பலானி அருவி (Palani Falls) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும்.[2]

அமைவிடம்

[தொகு]

சுமார் 150 மீ (492 அடி)[3] உயரத்திலிருந்து விழும் இந்த அருவி குலு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோவிலான பிஜ்லி மகாதேவ் கோயிலுக்கு வடக்கே சுமார் 6 கிமீ (3.7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[4][2] இந்த நீர்வீழ்ச்சி பைன் காடுகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.[5]

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், அருவியில் ஒரு கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் இதன் நீரில் குளிக்க கூடுகிறார்கள். இந்த அருவி புனிதமானதாக நம்பப்படுகிறது.[6][2]

பலானி அருவியினைச் சாலை வழியாக அணுகலாம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் குலு-மணாலி விமான நிலையம் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Waterfalls in Himachal, Lakes in Himachal, Hot Springs Himachal".
  2. 2.0 2.1 2.2 2.3 "Waterfalls in Himachal, Lakes in Himachal, Hot Springs Himachal". www.himachalonline.in. Retrieved 2024-05-26.
  3. "Waterfalls in India - World Waterfall Database". www.worldwaterfalldatabase.com (in ஆங்கிலம்). Retrieved 2024-05-26.
  4. Himachal, Insta (2022-05-22). "These waterfalls in Himachal Pradesh deserve a visit at Least Once in Your Lifetime". Insta Himachal (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-05-26.
  5. "7 stunning waterfalls in Himachal Pradesh". timesofindia.indiatimes.com. Retrieved 2024-05-26.
  6. Rahul (2017-06-10). "9 Spellbinding Waterfalls To Visit In Himachal Pradesh". Walking Wanderer (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலானி_அருவி&oldid=4065113" இலிருந்து மீள்விக்கப்பட்டது