பர்மிய நட்சத்திர ஆமை
பர்மிய நட்சத்திர ஆமை | |
---|---|
சப்பானின் சன்சைன் பன்னாட்டு மீன் காட்சியகத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜியோசெலோன்
|
இனம்: | ஜி. பிளாட்டினோட்டா
|
இருசொற் பெயரீடு | |
ஜியோசெலோன் பிளாட்டினோட்டா (பிளைத், 1863) | |
வேறு பெயர்கள் [3] | |
|
பர்மிய நட்சத்திர ஆமை (ஜியோசெலோன் பிளாட்டினோட்டா) என்பது அருகிய ஆமை இனமாகும். இது மியான்மரின் (பர்மா) வறண்ட, இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. பர்மிய நட்சத்திர ஆமை மியான்மரில் அழிந்து வரும் நிலையில் உள்ளது.
விளக்கம்
[தொகு]பர்மிய நட்சத்திர ஆமை இதன் வலுவான குவிமாடம் போன்ற முதுகு ஓட்டில் நட்சத்திர வடிவ வடிவங்களைக் கொண்டுள்ளது. இதன் ஓட்டில் நட்சத்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் புடைப்புகளும் உள்ளன. இரண்டு சிற்றினங்களின் மார்புப்பரிசங்களை ஒப்பிடுவதன் மூலம் இந்த ஆமையினை மிகவும் பொதுவான இந்திய நட்சத்திர ஆமையிலிருந்து எளிதாக வேறுபடுத்தி அறியலாம்.[4]
காப்பு
[தொகு]பர்மிய நட்சத்திர ஆமை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அருகிய இனமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் பொதுவாக உண்ணப்படுகிறது மற்றும் அண்டை நாடான சீனாவில் உணவு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பர்மாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தில், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் ஐந்து தன்னார்வலர்களுடன் 400 மணிநேரம் இதன் வாழ்விடத் தேடலில் ஐந்து ஆமைகளை மட்டுமே காணமுடிந்தது.
இது சி. ஐ. டி. இ. எசு. பிற்சேர்க்கை I இல் உள்ளது. வனத்தில் இந்த ஆமையினைப் பிடிப்பது சட்ட விரோதம் ஆகும் (விதிவிலக்கான உரிமம் பெற்ற சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது). மியான்மர் ஒருபோதும் இதன் ஏற்றுமதிக்கு அனுமதியை வழங்கவில்லை. அதாவது பெரும்பாலான கொல்லைப்படுத்தப்பட்ட ஆமைகள் முதலில் சட்டவிரோத ஆமைகளிலிருந்து வந்தவையா அல்லது சி. ஐ. டி. இ. எசு. பட்டியலுக்கு முன் உள்ள இறக்குமதி செய்யப்பட்டவை.[5]
கொல்லைப்படுத்தப்பட்ட ஆமையின் இனப்பெருக்கம்
[தொகு]பர்மிய நட்சத்திர ஆமையின் இனப்பெருக்கம் வளரிடத்தில் கடினமாக உள்ளது. மேலும் முதல் வெற்றிகரமான இனப்பெருக்கம் தைவானில் உள்ள தைபே உயிரியல் பூங்காவில் நடைபெற்றுள்ளது. இங்கு 2003-ல் ஒரு சில பர்மிய நட்சத்திர ஆமைகள் குஞ்சு பொரித்துள்ளன.[6]
இந்த ஆமையின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் முயற்சியில் யடனபோன் விலங்கியல் பூங்காவும் தற்போது கொல்லைப்படுத்தப்பட்ட ஆமையின் இனப்பெருக்கம் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
2004-ல் 200 ஆமைகள் தொடங்கி, அக்டோபர் 2017 வரை, இனப்பெருக்கத் திட்டங்களில் 14,000 ஆமைகள் இருந்தன. மேலும் 1000 ஆமைகள் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டுள்ளன. 31 சூலை 2021 அன்று, றிச்சர்ட் பிரான்சன் தனது தனிப்பட்ட தீவான நெக்கர் தீவில் இரண்டு குட்டி பர்மிய நட்சத்திர ஆமைகள் பிறந்ததாக அறிவித்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Praschag, P.; Platt, K.; Horne, B.D. (2020). "Geochelone platynota". IUCN Red List of Threatened Species 2020: e.T9013A123815185. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T9013A123815185.en. https://www.iucnredlist.org/species/9013/123815185. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 279. doi:10.3897/vz.57.e30895. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-5755.
- ↑ "Burmese starred tortoise videos, photos and facts - Geochelone platynota | ARKive". Archived from the original on 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
- ↑ "By Species | Turtle Survival Alliance (TSA)". Archived from the original on 2015-03-08. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
- ↑ "送緬甸星龜回緬甸-2003臺北動物園全球首度成功繁殖" (in Chinese (Taiwan)). 2009-09-16. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.
- ↑ Yin, Steph (4 October 2017). "Slow and Steady, a Tortoise Is Winning Its Race With Extinction (Published 2017)". The New York Times இம் மூலத்தில் இருந்து 2021-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211030050519/https://www.nytimes.com/2017/10/04/science/burmese-star-tortoise-myanmar.html?rref=collection/column/trilobites.
- Listed as Critically Endangered (CR A1cd+2 cd, C2a v2.3)
வெளி இணைப்புகள்
[தொகு]- கொலம்பியா அறிவியல் விமர்சனம்
- பர்மிய நட்சத்திர ஆமைகளுக்கான மறு அறிமுக தளங்களை மதிப்பீடு செய்தல்
- மத்திய மியான்மரில் ஆபத்தான நிலையில் உள்ள பர்மிய நட்சத்திர ஆமை ஜியோகெலோன் பிளாட்டினோட்டாவின் மக்கள்தொகை நிலை மற்றும் பாதுகாப்பு
- காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாடு