உள்ளடக்கத்துக்குச் செல்

பர்மிய சிறிய வயல் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
பர்மிய சிறிய வயல் எலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. lepidoides
இருசொற் பெயரீடு
Mus lepidoides
பிரை, 1931[1]

பர்மிய சிறிய வயல் எலி (Mus lepidoides-மசு லெபிடோயிடிசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை கொறிணி சிற்றினம் ஆகும். மத்திய மியான்மரில் ம. லெபிடோயிடிசு சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு விவரிக்கப்பட்டது. ஆனால் இது இந்தியச் சிறிய வயல் எலி ம. போடுகாவின் துணையினமாகச் சிற்றினத் தகுதி நிராகரிக்கப்பட்டது. சமீபத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இழைமணி மற்றும் உட்கரு மரபணுக்களின் டி. என். ஏ. வரிசைகள், மற்றும் உருவவியல் மறுமதிப்பீட்டுடன் ம. லெபிடோயிடிசு அனைத்து மசு சிற்றினங்களிலிருந்தும் இதனை வேறுபடுத்தி தனிச்சிற்றினமாக இதனை உறுதிப்படுத்துகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fry, T.B. 1931: Proposed classification of the smaller Indian field (or jungle) mice. Journal of the Bombay Natural History Society, 34: 916–921.
  2. Shimada, T.; Aplin, K.P.; Suzuki, H. 2010: Mus lepidoides (Muridae, Rodentia) of central Burma is a distinct species of potentially great evolutionary and biogeographic significance. Zoological Science, 27(5): 449–459.
  3. Tomofumi Shimada, Ken P. Aplin, Hitoshi Suzuki "Mus lepidoides (Muridae, Rodentia) of Central Burma is a Distinct Species of Potentially Great Evolutionary and Biogeographic Significance," Zoological Science, 27(5), 449-459, (1 May 2010)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிய_சிறிய_வயல்_எலி&oldid=3638758" இலிருந்து மீள்விக்கப்பட்டது