பர்மிங்காம் தியாகராஜர் விழா
Appearance
பர்மிங்காம் தியாகராஜர் விழா | |
---|---|
வகை | கருநாடக இசை |
அமைவிடம்(கள்) | சோலிகுல், இங்கிலாந்து |
Founded by | சுருதியுகே |
வலைத்தளம் | |
www |
பர்மிங்காம் தியாகராஜர் விழா (Birmingham Thyagaraja Festival) என்பது இங்கிலாந்தின் சோலிகுல் பகுதியில் நடைபெறும் வருடாந்திர தென்னிந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுக்கான நிகழ்ச்சியாகும். இது தெற்கு ஆசியாவில் இலாப நோக்கற்ற அமைப்பாகப் பணியாற்றிவரும் சுருதியுகே என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்த விழா தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியவரும், சிறந்த இசை ஞானியாக விளங்கியவருமான தியாகராஜரை கௌரவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது.[1][2]
2018 ஆம் ஆண்டில், இதயக் குழலிய நோய் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பது குறித்த ஆய்வுக்கான நிதியளிக்கும் பிரித்தானிய இதய அறக்கட்டளைக்கு நிதி திரட்ட இந்த விழா உதவியது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "April 2017 - Dean honoured for achievements in the field of science - University of Wolverhampton". Wlv.ac.uk (in ஆங்கிலம்). Retrieved 2018-03-12.
- ↑ ABPL. "Connecting all strands of Diversity through Carnatic Music". Asian-voice.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2018-03-12.
- ↑ "YOUR CHANCE TO NOMINATE UNSUNG FEMALE HEROES | Asian Independent". Theasianindependent.co.uk (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-03-12.