பரீட்சை மீதி
ஐ'பரீட்சை மீதி' (trial balance) என்னும் இருப்பாய்வு என்பது கணக்குப் பதிவியல் செய்முறையில் ஒரு வேலைத்தாள் ஆகும்.இப் பரீட்சை மீதியானது குறிப்பிட்ட காலத்தில் வியாபார நிறுவனமொன்றால் பாரமரிக்கப்படும் சகல கணக்கியல் பேரேடுகளின் நிதி நிலைமையினை ஒரே பார்வையில் விளம்பும் சாரமாக காணப்படும். ஒவ்வொரு நிதிக்காலதின் முடிவின் பொழுதும்,நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் முன்பாகவும்,கணக்கியல் பதிவுகளின் பிழையின்மையினை உறுதிப்படுத்தவும் பரீட்சை மீதி தயாரிக்கப்படும்.
ஆ=பரீட்சை மீதி மாதிரி=
[தொகு]பேரேடு | வரவுமீதி | செலவுமீதி |
---|---|---|
காசேடு | 220,000 | |
மூலதனம் | 320,000 | |
பெற்ற வாடகை | 15,000 | |
கொள்வனவு | 25,000 | |
சம்பளம் | 50,000 | |
விளம்பரம் | 50,000 | |
காப்புறுதி | 2,000 | |
மின்சாரம் | 2,000 | |
வரி | 6,000 | |
345000 | 345000 |
பரீட்சை மீதில் கணக்கியல் பேரேடுகளில் மீதி வரவாக இருப்பவை வரவு நிரலிலும்,மீதிகள் செலவாக இருப்பவை செலவுப் நிரலிலும் பதியப்படும். முடிவில் வரவு செலவு இவற்றின் மொத்த கூட்டுத்தொகையும் சமப்படும்,அவ்வாறு சமப்படாவிட்டால் பேரேட்டு பதிவுகளில் வழுக்கள் இருப்பதாக கொள்ளப்படும்.இத்தகைய தன்மையால் பரீட்சை மீதியானது ஏடுகளின் துல்லியத்தன்மையினை உணர்த்தும் ஒர் குறிகாட்டியாக அமைகின்றது.பரீட்சை மீதி சமப்படுவதை மாத்திரம் கருத்தில் கொண்டு பேரேடுகளின் வழுவற்றதன்மை கொண்டதாக உறுதியாக கூறமுடியாது.எடுத்துக்காட்டாக, இடம்பெறும் வியாபார ஊடுசெயலொன்றினை பதியும் போது வரவினை செலவாகவும்,செலவினை வரவாகவும் பதிந்தால் இங்கு பரீட்சை மீதி சமப்படும் எனினும் இங்கு பதிவுமுறை பிழையாகும்.