பாரசுநாத்
பாரசுநாத் | |
---|---|
Parasnath पारसनाथ | |
பாரசுநாத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து மலை உச்சியின் காட்சி. | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,365 m (4,478 அடி) |
ஆள்கூறு | 23°57′48″N 86°07′44″E / 23.9634°N 86.129°E[1] |
புவியியல் | |
அமைவிடம் | கிரிதி மாவட்டம், சார்கண்ட், இந்தியா |
மூலத் தொடர் | பாரசுநாத் மலைத்தொடர் |
ஏறுதல் | |
எளிய வழி | மலையேறுதல் |
பாரசுநாத் (Parasnath) என்பது பாரசுநாத் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். இந்தியாவின் சார்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிடீக் மாவட்டத்தில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியின் கிழக்கு முனையை நோக்கி இச்சிகரம் அமைந்துள்ளது.[2]. இதன் மலை உச்சியில் சிக்கார்சி சைன கோவில் உள்ளது,. இது ஒரு முக்கியமான சைன திருத்தலம் ஆகும்[3].
சார்கண்டின் உயரமான சிகரம்
[தொகு]1365 மீட்டர் உயரமுள்ள பாரசுநாத் சார்கண்ட் மாநிலத்தின் மிக உயரமான ஒரு மலை உச்சியாகும். எவரெசுட்டு சிகரத்திற்கு வடக்கே 450 கி.மீ தூரத்திலிருந்து இச்சிகரம் ஒரு தெளிவான நாளில் ஒரே நேர்க்கோட்டில் புலப்படாது என கோட்பாடுகள் தெரிவிக்கின்றன [4]. பாரசுநாத் ரயில்நிலையத்திலிருந்து இம்மலைக்கு எளிதில் செல்லலாம். இப்பகுதியில் நீர்வீழ்ச்சி மற்றும் பிற ஈர்க்கும் சுற்றுலா தலங்களும் உள்ளன[5]. மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் பாரசுநாத் சிகரமும் ஒன்றாகும். சமணத்தை பின்பற்றுபவர்களுக்கு வழிபடுவதற்கான ஒரு முக்கிய இடமுமாகும் [5]. ஒவ்வோர் ஆண்டும் இத்தலத்தின் புகழும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சூலை மாதம் முதல் மார்ச்சு மாதம் வரையிலான மாதங்கள் இத்தலத்தைப் பார்வையிட சிறந்த மாதங்கள் ஆகும் [6]. சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் 20 பேர் இம்மலைச் சிகரத்தில் முக்தி பெற்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Parasnath Hill
- ↑ "Official website of the Giridih district". பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
- ↑ "Shikharji." Jain V. Herenow4u.net Accessed 26 May 2012
- ↑ "View from Mt. Everest looking south". ViewfinderPanoramas.org. பார்க்கப்பட்ட நாள் 2018-10-14.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 5.0 5.1 "Giridih - Jharkhand Tourism". Archived from the original on 2013-03-19. பார்க்கப்பட்ட நாள் 2017-08-17.
- ↑ [1]