பரங்கி சாம்பிராணி
பாசுவெல்லியா செரேட்டா (Boswellia serrata) என்னும் தாவரப்பெயர் கொண்ட பரங்கி சாம்பிராணி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ஒரு வகை மரமாகும். இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகள் இதன் தாயகமாகும்.[1]இதனை பால் சாம்பிராணி , குந்துருக்கம், குந்தலிங்கம், நறும்பிசின், குமைஞ்சான், தூபவர்க்கம் என்றும் கூறலாம். பரங்கி சாம்பிராணிக்கு இந்தியன் ஃப்ரன்கின்சென்ஸ் என்ற பெயரும் உண்டு. பர்செராவே குடும்பத்தைச் சார்ந்தது. இது உலகின் பழமையான ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை தீர்வாகும். மூட்டு முடக்குவாதத்திற்கு அருமருந்தாக கருதப்படுகிறது.
வாழிடம்
[தொகு]இந்தியாவில் பீகார், ஒரிசா, ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வராயன், சேர்வராயன் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது . மலைச்சரிவுகளில் 500-700 மீ உயரப்பகுதியில் வளரும்.
இம்மரம் 15 மீ உயரம் வளரும் . முதிர்ந்த பட்டை வெள்ளையாக வழவழப்பாக இருக்கும் . தண்டு உடையக்கூடியது.
இலையோரம் சாய்வாகவும், இலை நுனி கூர்மையாக இருக்கும். இலை காம்பு 2-6 செமீ நீளம் உடையது . பூக்காம்பு தனியாகவோ, கொத்தாகவோ இருக்கும் .
இத்தாவரம் தற்போது நீடித்து நிலைக்க முடியாத நடைமுறைகளால் அழிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑
- USDA, ARS, GRIN. பரங்கி சாம்பிராணி in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 15 October 2014.
- ↑ Bongers, Frans; Groenendijk, Peter; Bekele, Tesfaye et al. (2019). "Frankincense in peril". Nature Sustainability 2 (7): 602–610. doi:10.1038/s41893-019-0322-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:2398-9629. Bibcode: 2019NatSu...2..602B.