உள்ளடக்கத்துக்குச் செல்

பரகல் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலஷ்கர்
பரகல் கான்
தாய்மொழியில் பெயர்পরাগল খান
பிறப்புசிட்டகாங் மாவட்டம், வங்காள சுல்தானகம்
பணிஇராணுவத் தளபதி
பிள்ளைகள்சுட்டி கான்

பரகல் கான் ( Paragal Khan) 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வங்காள சுல்தானகத்தில் நிர்வாகியாகவும் மற்றும் இராணுவத் தளபதியாகவும் பணியாற்றியவர் ஆவார். இவர் அலாவுதீன் உசைன் சாவின் இராணுவத் தளபதியாக பணியாற்றினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பரகல் கான் வங்காள சுல்தானின் கீழ் இராணுவத் தளபதிகளாக பணியாற்றிய முஸ்லிம் பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் குடும்பம் பல தலைமுறைகளாக சிட்டகாங் பகுதியில் வசித்து வந்தனர்.[2] இவரது தந்தை ரஸ்தி கான், உருக்னுதீன் பர்பக் ஷாவின் கீழ் சிட்டகொங்கின் இராணுவத் தளபதியாக இருந்தார்.

தொழில்

[தொகு]

அலாவுதீன் உசைன் சா சிட்டகொங்கைக் கைப்பற்றிய பிறகு, பரகல் கானை லஷ்கர் என்ற பட்டத்துடன் தளபதியாக்கினார். கான் வங்காள சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஷாவிடமிருந்து பெரும் நில மானியங்களைப் பெற்றார்.[2]

பரகல் கான் சிட்டகொங் மாவட்டத்தில் உள்ள சோர்வர்கஞ்சில் வசித்து வந்தார். கி.பி.1512-1516 ஆம் ஆண்டு வங்காள சுல்தானகத்திற்கும்-மராக் யூ இராச்சியத்திற்கும் ஏற்பட்ட போருக்குப் பிறகு, இவர் சிட்டகொங் பிராந்தியத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் தனது அரசவைக் கவிஞரான கவிந்திர பரமேசுவர் உட்பட பல கவிஞர்களை ஆதரித்தார். மகாபாரதத்தின் முதல் வங்காளப் பதிப்பான கவிந்திர மகாபாரதத்தை எழுதுவதற்கு இவர் ஆதரவளித்தார். பரகல்பூர் கிராமம் இவரது பெயரால் அழைக்கப்பட்டது. மேலும் இது இவரது சந்ததியினரின் தாயகம் என்றும் நம்பப்படுகிறது. கிராமத்தில் வசிப்பவர்கள் பரகல் திகி என்ற நீர்த்தேக்கத்தின் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.[2][3][4] இவரது மகன் சுட்டி கான் (நுசரத் கான் என்றும் அழைக்கப்படுகிறார்) தனது தந்தையைப் போலவே கவிஞர்களை ஆதரித்தார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rahman, Mahmudur (2018). The Political History of Muslim Bengal: An Unfinished Battle of Faith (in ஆங்கிலம்). Cambridge Scholars Publishing. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5275-2061-5.
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Cite Banglapedia
  3. வார்ப்புரு:Cite Banglapedia
  4. Sengupta, Nitish K. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib (in ஆங்கிலம்). Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341678-4. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  5. Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
  6. Sarkar, Benoy Kumar (1985). The Positive Background of Hindu Sociology: Introduction to Hindu Positivism (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishe. p. 467. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2664-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரகல்_கான்&oldid=3843340" இலிருந்து மீள்விக்கப்பட்டது